ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கடுப்பாகி செம டோஸ் விட்ட அஜித்.. ரூம் போட்டு கதறும் விக்னேஷ் சிவன்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகள் அனைத்தையும் விக்னேஷ் சிவன் தற்போது பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

ஏனென்றால் அஜித் இப்போது எல்லா இயக்குனர்களிடமும் மொத்தமாக ஸ்கிரிப்ட்டை கேட்டு வாங்கி விடுகிறார். அதில் சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றால் அவர் அதை மாற்றும்படி கூறிவிடுவார். தற்போது அப்படி ஒரு விஷயம்தான் விக்னேஷ் சிவன் எழுதிய கதையிலும் நடந்திருக்கிறது.

ஆனால் அஜித் சில காட்சிகளை மாற்ற சொல்லாமல், ஒட்டு மொத்த கதையையும் மாற்ற சொல்லி விட்டாராம். பொதுவாக அஜித்திற்கு அரசியல் சாயல் கொண்ட படங்களில் நடிப்பது பிடிக்காது. ஆனால் விக்னேஷ் சிவன் எழுதி இருந்த அந்தக் கதையில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இருக்கிறதாம்.

அதுமட்டுமல்லாமல் அரசியல் பிரபலம் ஒருவரை தாக்கும் வகையில் சில வசனங்களும் அதில் இருந்ததை பார்த்து அஜித் செம கடுப்பாகி உள்ளார். அதனால் அவர் விக்னேஸ் சிவனை அழைத்து இதெல்லாம் என்னுடைய படத்தில் இருக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

தேவையில்லாமல் இதுபோன்ற வசனங்களை எதற்காக வைத்துள்ளீர்கள், உடனடியாக இது அனைத்தையும் மாற்றி விடுங்கள் என்று ஆர்டர் போட்டு இருக்கிறார். அஜித்தை இம்பிரஸ் செய்வதற்காக விக்னேஷ் சிவன் படாதபாடுபட்டு ரெடி செய்ததை அவர் ஒரே வார்த்தையில் வேண்டாம் என்று கூறியது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை தளபதிக்கு எழுதின கதையை மாத்தி அஜித்க்கு எடுத்துட்டு வந்துட்டாரோ என்கிறது கோலிவுட் வட்டாரம்

அந்த காட்சிகளையும், வசனங்களையும் படத்தில் இருந்து நீக்கினால் மொத்த படமும் மாறிவிடும். அதனால் வேறு வழி இல்லாமல் தற்போது அவர் மொத்த கதையையும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இல்லை என்றால் இந்த வாய்ப்பே பறிபோகும் நிலையில் இருக்கிறதாம். தேவையில்லாமல் அஜித்தின் கோபத்தை சம்பாதித்துக் விடக்கூடாது என்பதற்காக விக்னேஷ் சிவன் தற்போது கதையை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம்.

Trending News