ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஜெயம் ரவி மிகப்பெரிய அளவில் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து திரைப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள அந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயம் ரவி, அஜித்துக்கு அறிவுரை கூறிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயம் ரவியின் நடிப்பில் பேராண்மை என்ற திரைப்படம் வெளிவந்தது. சமூக கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து அப்போது அஜித், ஜெயம் ரவியிடம் கேட்டுள்ளார். அதாவது அந்த படத்தில் ஜெயம் ரவி உடல் எடை குறைத்து நடித்திருந்தார். அதைப்பற்றி அஜித், ஜெயம் ரவியிடம் நீங்கள் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள், இவ்வளவு எடை குறைவதற்கு என்ன காரணம் என்று விசாரித்திருக்கிறார்.
ஏனென்றால் அஜித் அப்போது உடலில் பல ஆபரேஷன்கள் செய்து இருந்தார். அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் அவருடைய எடை சற்று அதிகமாக கூடியது. அதனால்தான் அவர் ஜெயம் ரவியிடம் இவ்வாறு விசாரித்துள்ளார். அதற்கு ஜெயம் ரவி தான் உணவு உட்கொண்ட முறைகள் பற்றியும், உடற்பயிற்சிகள் பற்றியும் அஜித்துக்கு விரிவாக கூறியிருக்கிறார். அதை அப்படியே கேட்டுக்கொண்ட அஜித் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய எடையை குறைத்துள்ளார்.
இந்த விஷயத்தை ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் அஜித் என்னிடம் தான் உடல் எடை குறைப்பதை பற்றி கேட்டார். ஆனால் தற்போது அவரிடம் இருந்து பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர் தன் உடலை பேணி காப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.