புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்துக்காக 2 நடிகர்களை தூக்கிய ஆதிக்.. ஏ கே இல்லாமல் நடக்கும் குட் பேட் அக்லி ஷூட்டிங்

சுதந்திர தினத்துக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் சூட்டிங் முடித்து விட வேண்டும் என்று அஜித் ஆர்டர் போட்டுவிட்டார். வெளிநாட்டில் நடைபெற வேண்டிய பாடல் காட்சிகளை கூட வேண்டாம் என்று கூறிவிட்டார் அஜித். ஆகஸ்ட் 13ஆம் தேதி இதற்கு பூசணிக்காய் உடைக்க போகிறார்களாம்.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தின் ஓ டி டி உரிமையை netflix வாங்கி உள்ளது. அவர்களும் தீபாவளிக்கு படம் வந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். அப்படி வரவில்லை என்றால் இந்த படத்திற்கான தொகையை செலுத்த மாட்டோம் என அக்ரிமெண்ட் போட்டுள்ளனர்.

ஏற்கனவே ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆரம்பிக்க விருந்த “குட் பேட் அட்லி” படம் இப்பவே சூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் தான் நடக்கிறது. ஒரே இடத்தில் நடப்பதால் அஜித் இரண்டு படங்களையும் கவனித்துக் கொள்கிறார். ஆனால் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவில்லை.

ஏ கே இல்லாமல் நடக்கும் குட் பேட் அக்லி ஷூட்டிங்

அஜித்துடன் கதை விவாதத்தில் மட்டுமே இருக்கிறார் ஆதிக்ரவிச்சந்திரன். இந்த படத்தின் ஆர்டிஸ்ட் செலக்சன் அவசியமென அஜித் கூறியதால் இரண்டு நடிகர்களை சல்லடை போட்டு தேர்ந்தெடுத்துள்ளார் ஆதிக்.லைம் லைட்டில் இருக்கும் 2பேர் இதில் நடித்து வருகிறார்கள்

கேமராமேன் நட்டி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இரண்டு பேரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் பண்ணுகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இப்பொழுது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வந்த மகாராஜா படத்தில் நட்டி பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Trending News