Ajithkumar: மீண்டும் ஒரு முறை தன்னுடைய ரசிகர்களிடம் சாட்டையை சுழற்றி இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
ரசிகர்களின் அதீத அன்பு அஜித்குமாருக்கு பெரிய அளவில் சந்தோஷத்தை கொடுத்தாலும், அதே நேரத்தில் அவர் சங்கடம் கொள்ளும் அளவிற்கு சில விஷயங்கள் நடக்கிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது இங்கிலாந்து ஆட்டக்காரர் ஒருவரை அழைத்து வலிமை அப்டேட் என அஜித் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினார்கள்.
சாட்டையை சுழற்றிய ஏகே
அதே மாதிரி நடிகர் தனுஷ் உன்னால் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து தல என்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் சாடினார்கள். அந்த நிமிஷத்திலிருந்து என்னை இனி தல என்று அழைக்கக் கூடாது, அஜித்குமார் அல்லது ஏகே என்று தான் அழைக்க வேண்டும் என அஜித் திட்டவட்டமாக சொல்லி இருந்தார்.
அதேபோல் வலிமை பட அப்டேட் குறித்து எந்த பொது வெளியிலும் கேட்க கூடாது எனவும் அறிக்கை விட்டிருந்தார். இப்போது சமீப காலமாக கடவுளே அஜித்தே என்ற விஷயம் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இருந்தது.
அஜித் ரசிகர்கள் பொதுவெளியில் தொடர்ந்து இது போல் செய்து வருகிறார்கள். இது குறித்து அஜித் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில்,சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க… அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.
எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு & வாழ விடு! என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க வேண்டியது என்னவென்றால் இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் அடுத்தடுத்த தாங்கள் ஒப்பந்தமாக இருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் கடவுளே அஜித்தை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி விட்டார்கள். இதை இப்போது நீக்குவார்களா என்பது இனி தான் தெரியும்.