தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் தற்போது வரை தங்களது சம்பளங்களை முழுமையாக வாங்காமல் பாதி வெள்ளையிலும் பாதி கருப்பிலும் வாங்கி வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் வரிஏய்ப்பு செய்வதற்காக இப்படி செய்து வருகின்றனர் என்கிறது கோலிவுட் வட்டாரம். அதுவும் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பெரும்பாலும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை கருப்பு பணமாக வாங்குகிறார்கள்.
அப்படி ஒரு காலத்தில் கருப்பு வெள்ளை என கலந்து சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் தான் தல அஜித். ஆனால் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அவர் கருப்பு பணம் வாங்குவதை முற்றிலும் தவிர்த்து விட்டாராம்.
என்னை அறிந்தால் படத்தை தயாரித்த ஏ எம் ரத்னம் அஜித்துக்கு அதிக சம்பளம் கொடுத்ததாக கேள்விப்பட்ட வருமான வரித்துறையினர் நேரடியாக அஜித் வீட்டிற்கு ரெய்டு விட்டு அஜீத்தை பல சிக்கலில் மாட்டிவிட்டனர்.
இது பெரிய அளவு பத்திரிகைகளில் செய்திகளாக வரவிடாமல் அஜித் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் பேசி அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொண்டார். ஆனால் அதன்பிறகு எந்த தயாரிப்பாளரிடமும் கருப்பு பணம் வாங்குவதே இல்லையாம் தல அஜித்.
தற்போது வரை தன்னுடைய சம்பளத்தை முழுமையாக பெற்று அதற்கு சரியாக வரியும் கட்டி விடுகிறார். இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அதற்கான வரிப்பணத்தையும் தயாரிப்பாளர்களிடம் பெற்றுவிடுகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.
![ajith-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/ajith-cinemapettai-3.jpg)