வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அஜர்பைஜானில் இருந்து வந்தவுடன் அஜித் செய்த விஷயம்.. பல கோடி மதிப்பில் கார் வாங்கிய ஏகே, வைரல் புகைப்படம்

Ajith: அஜித் கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருக்கிறது. மகிழ்திருமேனியின் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் விடாமுயற்சி படம் அஜர்பைஜானில் நடைபெற்றது.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்த உள்ளது. அஜார்பைஜானில் இருந்து வந்த கையோடு துபாயில் புதிய ஃபெராரி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை கிட்டத்தட்ட 9 கோடி மதிப்பு மிக்கவை. அஜித் கார் மற்றும் பைக் மீது அதிக பிரியம் கொண்டவர்.

பெரும்பாலும் அஜித் ரேசில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருவது வழக்கம்தான். அதோடு விடாமுயற்சி படபிடிப்பில் கூட ஒரு சேசிங் சீனில் கார் கவிழும் வீடியோ வெளியாகி அனைவரையும் பதப்பதைக்க வைத்திருந்தது.

ஃபெராரி காரை வாங்கிய அஜித்

ajith
ajith

அந்த விபத்தில் நூல் இலையில் அஜித் மற்றும் பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் உயிர் பிழை திருந்தனர். இருந்த போதும் அஜித் இது போன்ற பைக் மற்றும் கார் ரேஸ்களில் இன்னும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அதோடு உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்நிலையில் சிகப்பு நிற ஃபெராரி காருடன் அஜித் போட்டோ எடுத்திருக்கிறார். அந்த வைரல் புகைப்படம் இப்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இருக்கிறது.

மேலும் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக செம ட்ரீட் ஆக அஜித்தின் விடாமுயற்சி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

விடாமுயற்சியுடன் செயல்படும் அஜித்

Trending News