வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தப்பு செஞ்சவருக்கு வீடு வாங்கி கொடுத்து அழகு பார்த்த அஜித்.. நம்பி வந்தா நான் தான் உனக்கு கடவுள்

Actor Ajith: பொதுவாக அஜித் சாதாரண ஒரு ஹீரோ, என்னை யாரும் தூக்கிக் கொண்டாட வேண்டாம் என்று சொல்லி, படங்களில் நடிப்பது மட்டும்தான் என்னுடைய வேலை என அதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் எல்லா பக்கமும் அதிகமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவருடைய எதார்த்தமான குணமும், தன்னம்பிக்கையான முயற்சி தான்.

அதற்கு உதாரணமாக இவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இவரிடம் வேலை பார்த்த ஒரு டிரைவர் அஜித் பக்கத்தில் இல்லை என்று நினைத்துக் கொண்டு அங்கே இருப்பவர்களிடம் தவறாக பேசி இருக்கிறார். ஆனால் இது அனைத்தையும் அஜித் அங்கு இருந்து கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

Also read: எல்லாம் பத்தினிவிட்ட சாபம் தானா! அஜித்தை தவறாக வழி நடத்துகிறார்களா.? ஆட்டிப் படைக்கும் கெட்ட நேரம்

ஆனாலும் இதே பெரிது பண்ண வேண்டாம் என்று நினைத்து அவரை கூப்பிட்டு எதையும் கேட்காமல் அவருக்கு ஆறு மாத சம்பளத்தை கொடுத்து வேலையை விட்டு அனுப்பி இருக்கிறார். பிறகு கொஞ்சம் நாட்கள் கழித்து போலீசாரிடமிருந்து இவருக்கு போன் வந்திருக்கிறது. அதில் உங்க டிரைவர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் எல்லாரிடமும் கடன் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.

தற்போது அவர் எங்கள் கஸ்டடியில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள். உடனே அஜித் தன் மேனேஜரை அனுப்பி விசாரித்து வர சொல்லி இருக்கிறார். அதில் அந்த டிரைவர் அஜித்திடம் வேலை பார்த்த பொழுது பேங்கில் சொல்லி லோன் வாங்கி ஒரு சிங்கிள் பெட்ரூம் உள்ள வீட்டை வாங்கி இருக்கிறார்.

Also read: அஜித்தை ஒருமையில் கண்டபடி திட்டிய விஜயகாந்த்.. எதற்கும் அசராதவனாக இருந்து வென்று காட்டிய ஏகே.!

இதனை அடுத்து அஜித் வேலையை விட்டு அவரை நீக்கியதும் என்ன செய்வது என்று தெரியாமல் லோன் கட்ட முடியாமல் வீட்டில் முடங்கிப் போய் இருந்திருக்கிறார். அது அப்பொழுது பிரச்சினையாகி போலீஸ் வரை போயிருக்கிறது. இதை கேள்விப்பட்டதும் அஜித் வருத்தப்பட்டு நம்மை நம்பி வந்து வேலைக்கு சேர்ந்து வீடு வாங்கி இருக்கிறார். தற்போது குடும்பத்துடன் இருக்கும் நிலையில் அவரை திடீரென்று வேலையை விட்டு அனுப்பிட்டோமே என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

அதன் பின் அந்த வீட்டில் இருக்கும் லோன் 8 லட்சம் ரூபாயை பேங்கில் அடைத்து அந்த வீட்டை அவர் பெயருக்கு சொந்தமாக்கி கொடுத்திருக்கிறார். நம்மிடம் வேலை பார்த்த டிரைவர் தப்பு செஞ்சவர் என்று தெரிந்தும் அவருக்கு வீடு வாங்கி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். இதுதான் இவருடைய உண்மையான குணம். இவரை நம்பி வந்துட்டா அவங்களுக்கு இவர்தான் கடவுளாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்வார். ஆனால் இந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் கண்டிப்பாக யாரையும் கண்டு கொள்ளாமல் எனக்கு தெரியாது என்று சொல்லி இருப்பார்கள்.

Also read: சினிமா இண்டஸ்ட்ரிலாம் எங்களுக்கு தேவையே இல்லை.. விஜய், அஜித் செய்யும் கீழ்த்தரமான வேலைகள் 

Trending News