திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கேஜிஎஃப் இயக்குனரை கூப்பிட்ட அஜித்.. அப்ப கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் சேர போவது உறுதி.!

Actor Ajith: பெரிய நடிகர்கள் என்றாலே அவர்கள் நடிக்கும் படத்தைப் பற்றி நாலா பக்கமும் பரவலாக பேசப்பட்டு வரும். ஆனால் அஜித்தின் நிலைமை தலைகீழாக தான் இருக்கிறது. இவருடைய விடாமுயற்சி படம் துவக்கத்தில் இருந்து பிரச்சனை பற்றி மட்டும் தான் தகவல் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

அத்துடன் இவருடைய ரசிகர்களும் இதனால் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். மேலும் விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து தூக்கிப் பிறகு அஜித் செய்த முதல் வேலை இயக்குனர் பிரசாந்த் நீல்-க்கு அழைப்பு விடுத்தது தான். அப்பொழுது இவர்கள் இருவரும் சந்தித்த நிலையில் அஜித் அவரிடம் நேரடியாகவே நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார்.

Also read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

இதை கேட்ட இயக்குனருக்கு தலைகால் புரியாமல் ரொம்பவே பதட்டத்துடன் நீங்கள் இப்படி கூப்பிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களுடைய தீவிர ரசிகன் என்று சொல்லி இருக்கிறார். அதன் பின் நீண்ட உரையாடலுக்கு அடுத்து தற்போது சலார் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறேன்.

அதற்கு அடுத்து வேறு யாரிடமும் அட்வான்ஸ் வாங்காமல் உங்களிடம் நான் வருகிறேன். அப்பொழுது நீங்கள் ஓகே சொன்னால் கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்ற வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். இதனால் கண்டிப்பாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்குள் இவர்கள் கூட்டணி தொடங்குவது உறுதியாகிவிட்டது.

Also read: விடாமுயற்சியால் பிடித்த ஏழரை சனி.. நம்பிய இயக்குனரும் அஜித்தை கைவிட்ட பரிதாபம்

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அஜித் மற்றொரு பிராஜெட்டில் கையெழுத்து போட்டுவிட்டார். அந்த இயக்குனர் சூர்யாவுக்கு விருது வாங்கும் அளவிற்கு மிக பெஸ்டான படத்தை கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் சுதா கொங்காரா. இவர் இயக்கத்தில் தான் அடுத்து அஜித் படம் பண்ண போகிறார்.

தற்போது விடாமுயற்சி படத்திற்கு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் இப்படத்திற்கு பிறகு அஜித்துக்கு தொடர்ந்து பல படங்கள் வரிசை கட்டி இருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு அஜித் வேற மாதிரி வரப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அஜித் பட வாய்ப்பை பரிகொடுத்த இயக்குனர்.. விஷால் தந்தையால் ஏற்பட்ட சங்கடம்

Trending News