புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

அஜித் காரில் விஜய் கட்சி கொடி.. மறைமுகமாக விஜய்க்காக பிரச்சாரம் செய்யும் அஜித்?

விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, அவரை பலர் விமர்சித்து வருகிறார்கள். அவருக்கு தனது முழு சுப்பொருட்களையும் ரசிகர்கள், சினிமா துறையினர் என்று பலரும் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் அஜித் ஆதரவு தெரிவிப்பாரா என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அஜித் விஜய்-க்கு வோட்டு போடுவாரா? அஜித் விஜய்க்காக பிரச்சாரம் செய்வாரா என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.

இப்படிபட்ட சூழ்நிலையில் சமீபத்தில் அஜித், படங்களை வேகமாக முடித்துவிட்டு கார் ரேஸிங் செய்யப்போவதாக கூறியிருந்தார். மேலும் அதுக்கான பயிற்சியும் தற்போது எடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில், அவர் பயிற்சிக்காக ஸ்பெயின் சென்றிருந்தார். அங்கு அவர் பயன்படுத்திய கார், மற்றும் ஹெல்மெட் நிறத்தை வைத்து விஜய் கட்சி கோடி நிறத்தில் கார் ஹெல்மெட் உள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர்..

உண்மையான காரணம் என்ன?

இதை ஒரு சிலர், அஜித் விஜய்-க்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தான் கட்சிக்கொடி நிறத்தில் கார், மற்றும் ஹெல்மெட்டை வைத்துளளார் என்று கூறி வந்தனர். ஆனால் அது உண்மை காரணம் இல்லை.

இந்த நிறத்தை தான் டாப்-ல் உள்ள எல்லா racers-சும் பயன்படுத்தியுள்ளார்கள். அதனால் ஒரு inspiration-ஆக எடுத்துக்கொண்டு தான் அஜித், இந்த கலர் சூஸ் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி, சிவப்பு, மஞ்சள், கண்களுக்கு பளிச்சென்று தெரியும். அதனாலும் அவர் அதை பயன்படுத்தியுள்ளார். இது ஒரு சாதாரண விஷயம். இதையெல்லாம் கூடவா ஒப்பிட்டு, compare செய்வார்கள் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, இன்று இவர்கள் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், ஒரு காலத்தில் இருவருக்குமே கடுமையான போட்டி இருந்தது.

அப்படி இருக்கும்போது, என்ன தான் இன்று கூடி குழாவினாலும், போய் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு அஜித் இறங்கமாட்டார். அவருக்கு அதற்க்கு நேரமும் இருக்காது. தூரத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்தும் அளவில் தான் எப்போதுமே இவர்களது நட்பு இருக்கும்.

Trending News