அஜித்தின் கேரியர் பெஸ்ட்.. குட் பேட் அக்லி டீசர் எத்தனை நிமிஷம் தெரியுமா.?

Good Bad Ugly Teaser: விடாமுயற்சி தாமதமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை அடுத்து வரும் 3ம் தேதி படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது. இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

அவருடைய கேரக்டர் பெயர் ரம்யா என தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து நாளை படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி டீசர் எத்தனை நிமிஷம் தெரியுமா.?

இந்நிலையில் இந்த டீசர் அஜித்தின் கேரியர் பெஸ்ட்டாக இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது. அது மட்டும் இன்றி டீசர் 1 நிமிடம் 34 நொடிகள் ஒளிபரப்பாகும்.

அதுவும் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருப்பதோடு வெறித்தனமாக கொண்டாட வைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் டீசர் சென்னை உட்பட மற்ற இடங்களில் இருக்கும் முக்கிய தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் இருக்கின்றனர். மேலும் டீசரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து கொண்டாட்டம்தான்.

Leave a Comment