தமிழ் சினிமாவில் இன்று நல்லவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய இளமை காலங்களில் பலரையும் படாதபாடு படுத்தியுள்ளனர் என்பது சமீப காலமாக பலரையும் பேட்டி எடுப்பதிலிருந்து தெரிய வருகிறது.
தற்போது இருக்கும் சினிமா நடிகர்களில் மிகவும் ஜெண்டில்மேன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் தான் தல அஜித். ஆனால் அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு 25 வருடமாக தராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் அறியப்படும் தயாரிப்பாளராக இருப்பவர் செவன்த் சேனல் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். இவரிடம் தல 1995 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி தன்னுடைய பெற்றோரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாராம்.
அதன் பிறகு அந்த தயாரிப்பாளர் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அவரும் கடன் கொடுத்து உதவி செய்ததால் கால்ஷீட் தருகிறேன் என சம்மதித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் இழுத்தடித்துள்ளார். பின்னர் 1998 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று கூறி மேலும் 7 லட்சம் அட்வான்ஸ் வாங்கியுள்ளார் தல அஜித்.
பின்னர் அந்தப் படம் டிராப் ஆகி விட்டதாம். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித்திடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அஜீத் தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா வைத்துக்கொண்டு பிசியாக இருப்பதுபோல் நடித்து அந்த பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறாராம்.
இன்று அஜித் 50 கோடி சம்பளம் வாங்கினாலும் இன்னும் அந்த 6 லட்சம் பணத்தை திருப்பித் தரவில்லையாம். இதனை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய டூரிங் டாக்கிஸ் பேட்டியில் ஓபன் ஆக ஒருமையில் வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் மாணிக்கம் நாராயணன் அனைத்திற்கும் ஆதாரம் வைத்துள்ளேன் என்று கூறியது அஜீத் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கீழ்கண்ட வீடியோவில் மொத்த விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது:-