வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவிய அஜித்தின் நண்பர்.. பல வருடத்திற்கு பின் லீக்கான சீக்ரெட்

Surya-Jyotika: கோலிவுட்டில் எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர தம்பதிகள் என்றால் அது சூர்யா- ஜோதிகா தான். திருமணத்திற்கு பிறகு இவர்களைப் போன்று தான் வாழ வேண்டும் என 90ஸ் கிட்ஸ் தொடங்கி 2k கிட்ஸ் வரை நினைக்கும் ஜோடியாக இவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.

இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கி அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கடின உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள். சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் தங்களது சொந்த வாழ்க்கையில் காதலில் வெற்றி பெற கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்த காதல் ஜோடி இவர்கள்.

Also Read:கதாபாத்திரத்திற்காக மொட்டை அடித்த 6 நடிகர்கள்.. ஹீரோ இமேஜை டேமேஜ் செய்த சூர்யா

இப்போது போன்று டெக்னாலஜி இல்லாத காலம் அது என்பதால் இவர்களுடைய காதல் கதை அவ்வளவாக வெளியில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பிரபல நடிகர் ஒருவர் இவர்கள் இருவரின் காதலுக்கும் அந்த சமயத்திலேயே உதவி இருக்கிறார். இவர் நடிகர் அஜித்குமாரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இதைப் பற்றி அவர் சொல்லி இருக்கிறார்.

இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமை கொண்ட ரமேஷ் கண்ணா தான் இவர்கள் இருவரின் காதலுக்கு உதவிய அந்த நடிகர். தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் மற்றும் உலக நாயகன் கமலஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி ஆகியோர் நடித்த தெனாலி திரைப்படம் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இதில் தெனாலி திரைப்படத்திலும் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.

Also Read:அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

இந்த இரண்டு படப்பிடிப்புகளுக்கும் மாறி மாறி செல்லும் ரமேஷ் கண்ணா, சூர்யா சொல்வதை ஜோதிகாவிடமும், ஜோதிகா சொல்வதை சூர்யாவிடமும் செய்திகள் பரிமாறி உதவி இருக்கிறார். இந்த சுவாரசியமான விஷயத்தை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். பிரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானியின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் கண்ணா நடிகர் அஜித்குமாரின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். இன்று வரை தன்னுடைய படங்களில் அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தவறியதே இல்லை. ஆரம்ப காலங்களில் அஜித் மற்றும் ஷாலினி காதலிப்பது கூட இவருக்கும் இயக்குனர் சசிக்கும்தான் முதலில் தெரியும் என்றும் நிறைய பேட்டிகளில் இவர் சொல்லி இருக்கிறார்.

Also Read:ஒரே படத்தில் 5 நடிகைகளுடன் ஜோடி போட்டும் கிசுகிசுவில் சிக்காத ஹீரோ.. கெட்ட நேரத்தால் வாழ்க்கையை தொலைத்த சூர்யா பட வில்லன்

Trending News