Ajithkumar: புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தாவை விட கிளாஸியாக அஜித் ஆடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தின் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
ஒரு காலகட்டத்தில் அஜித் குமாரின் போட்டோ அல்லது வீடியோவை பார்த்துவிட மாட்டோமா என அவருடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
இதற்கு காரணம் அஜித் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாததுதான். அந்தக் குறையை போக்குவதற்காகவே ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கம் தலையை காட்டினார்.
அதன் பின்னர் அஜித் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம்.
அதிலும் குட் பேட் ஆகி படத்திற்காக அஜித் பெரிய அளவில் உடல் எடையை குறைத்த பிறகு வெளியாகும் புகைப்படங்கள் எல்லாம் வைரல்.
சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண வரவேற்பில் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
சமந்தாவுக்கே டஃப் கொடுக்குறாரே ஏகே?
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அதே தோற்றத்துடன் அஜித் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை ஒரு கணம் பார்க்கும் பொழுது நிஜமாகவே அஜித் ஆடுவது போல் தான் இருக்கிறது. ஆனால் இரண்டு மூன்று தடவை பார்த்த பிறகு தான் அது அஜித் இல்லை என்பது தெரிகிறது.
ஒரு வேளை அஜித் அந்த பாட்டுக்கு ஆடுவது போல் AI வீடியோ உருவாக்கப்பட்டு இருக்கும். அல்லது அஜித் தோற்றம் கொண்ட ஒருவர் நடனமாடி இருக்க வாய்ப்பிருக்கிறது.