புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு செல்லாத அஜித்.. இப்ப சென்னைக்கு வர இதுதான் காரணம், புகைப்படம்

Ajith – Vijayakanth : அஜித் தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனது குடும்பத்துடன் சமீபத்தில் அஜித் துபாய் சென்று இருந்தார்.

மேலும் அங்கு அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் உயிரிழந்த போது அஜித் துபாயில் இருந்ததால் அவரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஆனால் கண்டிப்பாக அஜித் வந்திருக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த சூழலில் கலைஞர் நூற்றாண்டு விழா நடப்பதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த முறை அஜித்தும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் துபாயிலிருந்து விரைந்து இருக்கிறார்.

Also Read : சும்மா இருக்கும் சிங்கத்தை சுரண்டிப் பார்க்கும் விட்டில் பூச்சிகள்.. ஆக்ரோஷமாக கொந்தளித்த அஜித்

மேலும் ஏர்போட்டில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால் விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு அஜித் கலந்து கொள்ளாத நிலையில் இப்போது கலைஞர் நூற்றாண்டு விழாவில் மட்டும் பங்கு பெறுகிறார் என்பதால் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் அஜித் விஜயகாந்தின் நினைவு இடத்திற்கு சென்று தனது அஞ்சலியை செலுத்த இருக்கிறார். கண்டிப்பாக இன்றே நினைவு இடத்திற்கு அஜித் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் கேப்டன் இறுதி அஞ்சலியில் அஜித் கலந்து கொள்ளாதது கேப்டன் ரசிகர்கள் மத்தியில் வருத்தம் அளிக்க தான் செய்கிறது.

ஏர்போட்டில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்

ajith
ajith

Also Read : அஜித் பொண்ணுக்கு 16 வயசு ஆயிடுச்சா.! ஷாலினியை மிஞ்சிய அனோஷ்காவின் லேட்டஸ்ட் போட்டோ

Trending News