திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்தாத அஜித்.. பின்னால் இப்படி ஒரு காரணமா?

Ajith – Vijayakanth : நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறப்புச் செய்தி பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. அவரின் பூத உடலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் தொண்டர்கள் என பலரும் மரியாதை செலுத்தினர். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக சில நடிகர்கள் வெளிநாடுகளில் மாட்டிக் கொண்டனர்.

அதன் பிறகு விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு அவரது மனைவி பிரேமலதாவை பார்த்து ஆறுதல் கூறிவந்தனர். அந்த வகையில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேப்டனின் இறப்புக்கு வர முடியாததால் அதன் பிறகு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி சென்றனர்.

மேலும் அஜித்தும் அப்போது துபாயில் இருந்ததால் சென்னை திரும்பிய உடனே விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அஜித் அங்கு செல்லாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அஜித் பிரேமலதாவிடம் சந்திப்பதற்கான நேரத்தை கேட்டிருக்கிறார்.

Also Read : விஜய் அஜித் இல்லனா என்ன நடக்கும்.. கடைசியில் அசிங்கப்பட்டு நின்ன உச்ச நட்சத்திரங்கள்

அஜித் அங்கு வருகிறார் என்று தெரிந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் அதிகாலை 3 மணிக்கு அஜித் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். ஆனால் பிரேமலதா தரப்பில் இருந்து தற்போது வரை எந்த பதிலுமே வரவில்லையாம்.

இதனால் தான் தற்போது வரை அஜித் பிரேமலதாவை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிப்புறத்தை பொருத்தவரையில் அஜித் ஆணவம் பிடித்தவர், திமிர் பிடித்தவர் அதனால் தான் விஜயகாந்த்-க்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது.

Also Read : அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. சின்னத்திரையில் கலக்கும் அந்த 6 அடி ஹீரோயின்

Trending News