வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யாருமே யோசிக்காத விஷயத்தை செய்த அஜித்.. படம் கை கொடுக்கா விட்டாலும் இந்த வேலையில அமோக லாபம்

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அவருடைய விடாமுயற்சி படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதோடு அப்படியே இருக்கிறது. அதற்குள் இவருக்கு விருப்பமுள்ள பைக் ரெய்டு மூலம் உலகத்தையே சுற்றி வருகிறார். அதற்காக கடந்த மாதம் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களுக்கு சென்றார்.

அப்பொழுது இவருக்கு திடீரென்று தோன்றிய ஒரு விஷயம் தான் மோட்டார் பைக் மூலம் இந்தியாவை சுற்றி பார்க்க நினைக்கும் அவர்களுக்கு “ஏகே மோட்டோ ரெய்டு” என்ற சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறார். இதுதான் தற்போது இவருடைய படத்தை விட பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: அகல கால் வைத்ததால் அடியோடு அழிந்த 5 தயாரிப்பு நிறுவனம்.. அஜித் படத்தால் ஏற்பட்ட தோல்வி

இதை தெரிந்ததிலிருந்து நிறைய பேர் எப்பொழுது இது ஆரம்பிக்கப்படும் என ஆவலுடன் தொடர்ந்து நிறைய போன் கால்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இவருடைய புது பிசினஸ் பரபரப்பாக சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த தொழிலுக்காக இவர் முதலீடு செய்தது 11/4 கோடி மதிப்பிலான மொத்தம் பத்து பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறார்.

இந்த பைக்குகள் அனைத்தும் வந்தபின் அனைத்து வேலைகளும் வேகமாக தொடங்கப்படும். ஆனால் இதில் சேர்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு அதன் பின்னரே ஒருவர் ஒருவராக சேர்க்கப்படுவார்கள். அத்துடன் இதில் சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்றுவதற்கு ஒரு ஆளுக்கு 6 முதல் 8 லட்சம் வரை வசூலிக்கப்படும்.

Also read: பிரச்சனை இருக்கு என்று தெரிந்தாலே எஸ்கேப் ஆகும் ஏகே.. சர்ச்சை நபர்களை அண்டாத அஜித்

இந்த மாதிரி ஒரு புதுவிதமான பிசினஸை யாரும் எந்த நடிகரும் யோசித்து இருக்க மாட்டார்கள். அதாவது எப்படி என்றால் நடிகர்களாக இருப்பவர்கள் அவருடைய நடிப்பை எப்படி மேலும் மேலும் வளர்த்துக் கொள்வது மட்டும்தான் யோசிப்பார்கள். அதற்கு விதிவிலக்காக இவருக்கு தனிப்பட்ட ஆர்வத்தை எப்படி மற்றவர்களும் உபயோகிக்க முடியும் என்று அதை வியாபார யுக்தியுடன் யோசித்தது இவராகத்தான் இருக்க முடியும்.

அத்துடன் இத்திட்டத்தின் மூலம் அஜித்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர்களும் சேர்வார்கள் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். அதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்ற பொழுது சான்றிதழ் வாங்கும் பொழுது வேண்டுமென்றால் கூட அஜித் கையால் வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அவருடைய ஆசையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இவருடைய படம் இவருக்கு கை கொடுக்காவிட்டாலும் இந்த பிசினஸ் கண்டிப்பாக அமோக லாபத்தை கொடுக்கும்.

Also read: வடிவேலு வாண்டடா போய் ஏழரை கூட்டிய 5 நடிகர்கள்.. அஜித்தையே காண்டாக்கிய சம்பவம்

Trending News