புதன்கிழமை, நவம்பர் 27, 2024

விடாமுயற்சியும் இல்ல, குட் பேட் அக்லியும் இல்ல.. அஜித்துக்கு குடும்பமே போட்ட கடும் எச்சரிக்கை

Actor Ajithkumar: சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி விடமாட்டானு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது இப்போ அஜித் விஷயத்தில் தான் சரியா இருக்கு. இது என்னடா அஜித் ரசிகர்களுக்கு வந்த சோதனை என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆறுதல் சொல்லும் நிலையில் இருக்கிறது.

ஏற்கனவே தளபதி விஜய் மக்கள் சேவை செய்யப் போகிறேன் என சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார். இப்ப, அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது எல்லோருக்கும் தர்ம சங்கடமான சூழ்நிலைதான். கிட்டத்தட்ட ஒரு இருபது ஆண்டு காலங்கள் என்பது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை மையப்படுத்தியே கடந்து விட்டது.

இனி அடுத்து அந்த இடத்தில் போட்டி போடும் அளவுக்கு வெயிட்டான ஆட்கள் யாரும் இல்லை. உண்மையை சொல்லப்போனால் அஜித் மற்றும் விஜய் படங்கள் இல்லை என்ற ஒரு சூழ்நிலை வந்து விட்டால் எஃப்டிஎப்எஸ் கலாச்சாரம் கூட கலை இழந்து விடும்.

சமீப கால சினிமா பொருளாதாரம் என்பது இவர்கள் இரண்டு பேரையும் நம்பித்தான் இருந்தது. மற்ற படங்களை ஒப்பிடும்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் ரொம்பவே சுறுசுறுப்பாக கலந்து கொண்டார்.

படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் அஜித் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்பிய அஜீத் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது. அவர் நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் கூட இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

அஜித்தை எச்சரித்த மருத்துவர்கள்

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அஜித் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அப்பல்லோ மருத்துவர்கள் அவருக்கு ஒரு பெரிய கண்டிஷன் போட்டு இருக்கிறார்களாம். அதாவது இந்த ஆபரேஷனுக்கு பிறகு அதிகமாக வேலை செய்யக்கூடாதாம்.

நடிகர் அஜித்குமார் கண்டிப்பாக ஒரு மூன்று மாதத்திற்கு ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் அஜித் குடும்பத்தினரும் மருத்துவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என அவரை எச்சரித்து இருக்கிறார்கள்.

இதனால் அவர் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுக்க முடிவெடுத்திருக்கிறார். அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் விடா முயற்சி படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று மாத இடைவெளிக்கு பிறகு இந்த பட வேலைகள் எப்படி ஆரம்பிக்கும் என தெரியவில்லை.

விடாமுயற்சியின் நிலைமையை இப்படி இருக்க, குட் பேட் அக்லி படத்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமே இப்போதைக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்களின் மனதிருப்தி என்பதை தாண்டி, அஜித் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலே போதும்.

- Advertisement -spot_img

Trending News