சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தல வீட்டு வாசலில் பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித்தான் காரணம் என நடுரோட்டில் கதறல்

அஜித்க்கு தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. இதனால் அஜித் தரப்பிலிருந்து உடனடியாக அந்த வீடியோ எடுத்தது யார் என்பதை விசாரித்து கண்டித்தனர்.

இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்மணி. இதன் காரணமாக தல அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்க பலமுறை அஜித் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் வாசலிலேயே அனுப்பப்பட்டார்.

சில நாட்கள் கழித்து அஜித்திடம் கூறியதாகவும் அவர் குழந்தையின் படிப்புக்கு வேண்டுமானால் பத்தாயிரம் தருவதாகவும், மற்றபடி வேலையில் சேருவதற்கு பரிந்துரை செய்ய மாட்டேன் எனவும், அஜித் கூறியதாக சுரேஷ் சந்திரா அந்த பெண்மணியிடம் கூறியுள்ள வாட்ஸ்அப் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

இதனால் அந்தப் பெண்மணி ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது அந்த பெண் மீண்டும் அஜித் வீட்டு வாசலில் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மேலும் அஜித்தால் தான் எனக்கு வேலை போய்விட்டது என் சாவுக்கு காரணம் அஜித் தான் என கதறி கொண்டே சென்றார். இதனை கேள்விப்பட்டு வந்த போலிஸ் அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Trending News