வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தேவையில்லாத வேலையைப் பார்த்த அஸ்வின்.. ரவுண்டு கட்டி அடித்த அஜித் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியீட்டின் போது பல பிரச்சினைகளை சந்தித்தது.

அதனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அஸ்வின் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மைனா, கும்கி போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் பிரபு சாலமன்.

ஆனால் கடைசியாக இவரின் இயக்கத்தில் வெளிவந்த தொடரி போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. அதன் பிறகு சிறிது காலம் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்த இவர் தற்போது கும்கி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அதை தொடர்ந்து இவர் அஸ்வினை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பை வெளியிடுவதற்காக படக்குழுவினர் ஏகே 2 என்ற பெயரைப் பயன்படுத்தினர்.

அதாவது அஸ்வின் குமார் என்ற பெயரை சுருக்கி ஏகே என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் படத்தின் டைட்டில் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏகே என்றால் அது அஜித் மட்டும் தான் வேறு யாரும் கிடையாது என்று அவர்கள் அதற்கு பதிலடி தரும் வகையில் சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர். இதைப் பார்த்த படக்குழுவினர் தற்போது செம்பி என்று படத்தின் பெயரையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

Trending News