தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு சலித்துப் போன தல ரசிகர்கள் வேறு வழியே இல்லாமல் திருச்செந்தூர் முருகனிடம் அப்டேட் கேட்டு சென்ற புகைப்படம் இணையதளங்களில் காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது.
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை.
இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். இருந்தாலும் தினமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வகையில் வலிமை அப்டேட் கேட்டு தயாரிப்பாளரையும் படம் சம்பந்தப்பட்ட நடிகர்களையும் தொந்தரவு செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நேரடியாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சமூகவலைதளத்தில் கேலி கிண்டல் செய்தார்கள். அவரும் அஜித் பட அப்டேட் கொடுப்பார் என்று பார்த்தால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை தொடர்ந்து கொடுத்து வந்ததால் ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர் போல.
இந்நிலையில் தல ரசிகர்கள் வேறு வழியில்லாமல் கடவுளிடம் முறையிட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வலிமை அப்டேட் கேட்டு சென்ற ரசிகர்களின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதான் தற்போது சினிமா வட்டாரத்தில் சிரிப்பை ஏற்படுத்தி உள்ள விஷயமாகும். இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை. அதிலும் தல ரசிகர்கள் முதல் இடம் தான் என கொண்டாடி வருகின்றனர்.