Vidaamuyarchi: ‘பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என’ என்று பார்த்திபன் பாடியிருப்பார். இந்த படத்தில் நடிகர் அஜித்தும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.
கடைசியில் இந்தப் பாட்டு அஜித் ரசிகர்களுக்கு இப்போது பொருத்தம் ஆகிவிட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு தரமான கொண்டாட்டமாக அமைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் மோதிக்கொண்டார்கள்.
இந்த பொங்கல் ரேஸில் யார் ஜெயித்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிர் தான். ஆனால் அதன் பிறகு விஜய் லியோ மற்றும் கோட் என இரண்டு படங்களை ரிலீஸ் செய்து விட்டார்.
அஜித் படம் மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. நேற்றைய தினம் வரை அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அவருடைய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
கலங்கி போன அஜித் ரசிகர்கள்
ஆனால் லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.
இந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்ட 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்கள் அத்தனையும் பொங்கல் நாளன்று படம் ரிலீஸ் ஆகும் என அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் சிபிராஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் 10 ஹவர்ஸ். புதுமுக இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி ராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
சிபிராஜ் இப்படி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கடுகளவு கூட எந்த பக்கமும் வெளியாகவில்லை.
விடாமுயற்சி என்ற ஒரு பெரிய தலை பின்வாங்கிக் கொண்டதும் சத்தம் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்து விட்டார்கள்.
இதனால் தான் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து போய் தயாரிப்பு நிறுவனமான லைக்காவை கடிந்து கொண்டிருக்கிறார்கள்.