Vijay vs Ajith: இருந்தாலும் ரொம்ப அழும்பல் பண்றீங்க பா, என்று சொல்லும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள். நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை போர்க்களம் ஆக்குவது என்பது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்.
இருவரும் பந்தய களத்தில் இருக்கும் வரை இந்த சண்டையும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது இருவருமே தங்களுடைய இலக்கை மாற்றிக் கொண்டு வெவ்வேறு பாதையில் பயணிக்க காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இதெல்லாம் தேவையா பாஸ் என்பது போல் தான் இருக்கிறது. சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிகளை வழங்கினார் நடிகர் விஜய். அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகின.
அழும்பு பண்ணும் அஜித் ரசிகர்கள்!
அதே சமயத்தில் நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் வெளியாகின குட் பேட் அக்லி படத்திற்காக நடிகர் அஜித்குமார் கிட்டதட்ட 18 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். அதே நேரத்தில் விஜய் தளபதி 69 படத்திற்காக வயதான தோற்றத்தில் நடிக்க வேண்டிய காரணத்தால் கொஞ்சம் எடை கூடி இருக்கிறார்.
எப்பவுமே அஜித்குமார் தான் உடல் பருமன் சம்பந்தப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை அதிகமாக சந்தித்திருக்கிறார். விஜய் எப்போதுமே கச்சிதமாக இருக்கிறார் என்பது அவருடைய ரசிகர்களின் பெரிய கௌரவமும் கூட.
இந்த நிலையில் விஜய் உடல் எடை கூடி அஜித் ஸ்லிம்மாக இருப்பதை தான் தற்போது பஞ்சாயத்தாக எடுத்திருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு வட்டம் சார் என்று அஜித் மற்றும் விஜய்யின் சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அத்தோடு இதுதான் கர்மா என்றும் சொல்லி வருகிறார்கள்.