AGS : கோட் படம் வெளியான நிலையில் வசூலும் எதிர்பார்த்ததை விட அமோகமாக இருந்து வருகிறது. எப்போதுமே விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது இரு தரப்பு ரசிகர்களிடமும் விமர்சனங்கள் எழுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை கோட் படத்திற்கு அஜித் ரசிகர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அஜித்துக்கு மாஸ் ஹிட் படமான மங்காத்தாவை கொடுத்த வெங்கட் பிரபு கோட் படத்தை எடுத்திருந்தார். அதோடு விஜய் இந்த படத்தில் அஜித் பெருமை பேசும் படி ஒரு காட்சியும் வெங்கட்பிரபு வைத்திருந்தார்.
இதனால் கோட் படம் அஜித் ரசிகர்களுக்கும் ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது. இந்த சூழலில் இப்போது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் தரம்கேட்ட ஏஜிஎஸ் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். பொதுவாக ஒரு படம் வெளியான போது அதைப்பற்றி வெளியாகும் பாசிட்டிவ் மீம்ஸ்களை தயாரிப்பு நிறுவனம் ரீபோஸ்ட் செய்வது வழக்கம் தான்.
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக மாறிய அஜித் ரசிகர்கள்
அவ்வாறு கோட் படத்திற்கு வந்த பாசிட்டிவ் மீம்ஸ் ஆகியவற்றிற்கு ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் லைக் செய்து வந்தது. இந்நிலையில் அஜித்தை விமர்சனம் செய்து ஒரு மோசமான மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டிருந்த நிலையில் அதை ரீ போஸ்ட் செய்துள்ளது.
படம் வெளியான பின்பு ஏஜிஎஸ் தனது வேலையை காட்டி விட்டதாக அஜித் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். அதோடு தரம்கேட்ட ஏஜிஎஸ் என்று இந்நிறுவனத்திற்கு எதிராக நிறைய போஸ்ட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
அதுவும் அந்த ஹேஷ்டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ இப்போது அஜித் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளாகி இருக்கிறது. இதற்கு தெளிவான பதிலை ஏஜிஎஸ் விரைவில் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கோட்டுக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்