ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழிக்கும் அஜித் பட நடிகை.. கண்டிஷன் என்ற பெயரில் போடும் பட்டியல்

Actor Ajith: சில நடிகைகள் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குதோ இல்லையோ தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு கல்லா கட்டி வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் அஜித் பட நடிகை ஒருவர் தன்னை தேடி வரும் நல்ல வாய்ப்புகளை கூட தட்டி கழித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்தவர் தான் மஞ்சு வாரியர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர். அதன் காரணமாகவே இவரை தேடி பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுத்து செல்கின்றனர்.

Also read: அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

ஆனால் அவரோ துணிவு படத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை ஏற்க வேண்டும் என்றால் இவர் எக்கச்சக்கமான கண்டிஷன் போடுகிறாராம். இதனாலேயே பல வாய்ப்புகளை இவர் கைநழுவ விட்டுள்ளார்.

அந்த அளவுக்கு இவர் கண்டிஷன் என்ற பெயரில் ஒரு பெரிய பட்டியலே போடுகிறாராம். அந்த வகையில் இவரிடம் கதை சொல்ல அணுக வேண்டும் என்றால் முதலில் அவருக்கு இ மெயில் செய்ய வேண்டுமாம். அதில் சம்பந்தப்பட்டவர்களின் பயோடேட்டா முதற்கொண்டு அதனை தகவல்களும் கொடுக்க வேண்டுமாம்.

Also read: தகுதி இல்லாமல் படம் எடுக்க வந்த அஜித் பட இயக்குனர்.. இரட்டை வசூல் தந்த படம்

அதாவது ஒரு இயக்குனர் அவரை சந்திக்க வேண்டும் என்றால் இதற்கு முன்பாக அவர் எத்தனை படங்கள் எடுத்திருக்கிறார், எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார் என்பது போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டுமாம். அதை எல்லாம் பரிசோதித்துப் பார்க்கும் மஞ்சு வாரியர் தனக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் தான் மேனேஜரிடம் பேச சொல்வாராம்.

அதைத்தொடர்ந்து மேனேஜர் சில பல கண்டிஷன்களை போட்டு அனைத்தும் ஒத்து வந்தால் தான் மேற்கொண்டு மஞ்சு வாரியரிடம் பேச முடியுமாம். அதிலும் சம்பள விஷயத்தில் இவர் சில கெடுபிடிகளும் காட்டுகிறாராம். இதையெல்லாம் கடந்து தான் தயாரிப்பாளரால் இவருடைய தேதிகளை வாங்க முடியும் என்ற நிலை இப்போது இருக்கிறது. இதுதான் இப்போது திரையுலகின் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

Also read: அப்பாக்களை பெருமைப்படுத்திய 5 படங்கள்.. தூக்குதுரையாக கலங்க வைத்த அஜித்

- Advertisement -

Trending News