வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடாமுயற்சிக்கு டப்பிங் பேசிய அஜித்.. பொங்கல் ட்ரீட்டுக்கு ரெடியான ஃபேன்ஸ்

Ajith-Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் நீண்ட காலமாக விடாமுயற்சி உருவாகி வந்தது. லைக்கா பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ajith
ajith

துணிவு படம் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விடாமுயற்சி டீசர் வெளியாகி இருந்தது.

ajith
ajith

அதில் அஜித் தெறிக்கவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர்.

ஒரே நேரத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளிவருவது சாத்தியம் கிடையாது. அப்படி என்றால் விடாமுயற்சிக்கு சிக்கலா என்ற ஒரு கேள்வி எழுந்தது.

விடாமுயற்சிக்கு டப்பிங் பேசிய அஜித்

இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி வைரலாகி வருகிறது. அதாவது அஜித் விடாமுயற்சியின் டப்பிங்கை தற்போது முடித்துள்ளார்.

இதை அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் சவுன்ட் இன்ஜினியருடன் அஜித் இருக்கும் போட்டோவும் வெளியாகி உள்ளது.

மேலும் பொங்கலுக்கு உலக அளவில் விடாமுயற்சி ரிலீஸ் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் பல குழப்பங்களுக்கு முடிவு கிடைத்திருக்கிறது.

மேலும் ரசிகர்கள் இந்த பொங்கல் தல பொங்கல் தான் என ஃபயர் விட்டு வருகின்றனர். மேலும் பண்டிகை நாளுக்கு அஜித்தின் ட்ரீட்டை காணவும் தயாராகி வருகின்றனர்.

Trending News