திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியின் வெற்றி ரகசியத்தை பின்பற்றும் அஜித்.. பூரித்துப்போய் தயாரிப்பாளர் கூறிய உண்மை சம்பவம்

Rajini – Ajith : ரஜினி இப்போது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் பல வருடமாக நிலைத்து நிற்கிறார். ஆனால் இந்த இடத்தை பிடிக்க ஆரம்பத்தில் பல கஷ்டங்களை தாண்டி தான் வந்திருக்கிறார். அந்த வகையில் ரஜினியின் வெற்றி ரகசியம் ஒன்றை சமீபகாலமாக அஜித்தும் ஃபாலோ செய்து வருகிறார்.

ஆரம்பம் முதலில் அஜித்துக்கு நிறைய விஷயங்களை ரஜினி சொல்லிக் கொடுத்து உள்ளார். சினிமாவுக்கு வந்த புதிதில் ஊடகங்களில் அஜித் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திவிடுவார். அப்போது அஜித்தை அழைத்து ரஜினி இனி ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுக்க வேண்டாம் என அறிவுரை கூறியிருந்தார்.

அதிலிருந்து தற்போது வரை அஜித் அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொண்டார். அதேபோல் ரஜினியின் வெற்றி ரகசியம் என்னவென்றால் ஒரு தயாரிப்பாளருக்கு தோல்வி படம் கொடுத்து விட்டால் அதே நிறுவனத்திற்கு ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட்டு தான் அடுத்த தயாரிப்பாளரிடம் செல்வார்.

Also Read : கழுவி ஊற்றியதைப் பார்த்து கொந்தளித்த ரஜினியின் வாரிசு.. சிங்கப்பெண் ஸ்கெட்சில் சிக்காமல் பல் பிடித்துப் பார்த்த ஹீரோ

அதனால் தான் இப்போதும் வெற்றி பெற்று நிலைத்து நிற்க முடிகிறது. சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு தோல்வி படத்திற்குப் பிறகு தங்க மகன் மற்றும் மூன்று முகம் படங்களை ரஜினி கொடுத்திருந்தார். இதேபோல் நிறைய தயாரிப்பாளர்களுக்கு ஹிட் கொடுத்துள்ளார்.

அதையே தான் அஜித்தும் ஃபாலோ செய்து வருகிறார். அதாவது விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகு விஸ்வாசம் என்ற ஹிட் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருந்தார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பூரித்துப் போய் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் கூறியிருந்தார்.

Also Read : மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகும் 6 படங்கள்.. விஜய்க்கும் அஜித்துக்கும் இதுல கூட போட்டியா.?

Trending News