வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆத்விக் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்.. மெஸ்ஸி பாய் பார்ட்டி போட்டோஸ் வைரல்

Ajith gave a pleasant surprise on Aadvik’s birthday: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என வளர்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். அரிதாரத்தை சினிமாவில் மட்டுமே பூசிக்கொண்டு தரமான படைப்புகளை வழங்கி நிஜத்தில் நேர்மையானவராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி சூட்டிங்கில் பிசியாக உள்ளார். 

சமீப காலமாக மீடியாக்களின் பார்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட  அஜித்குமாரை வலைதள விஷமிகள் சிலரும் இவருக்கு வேண்டாத பத்திரிகையாளர்களும் இவரைபற்றி அவதூறு பேசி ரசிகர்களிடையே தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் அஜித் தனது ரசிகர்களுக்காக மீண்டும் விடாமுயற்சி ஆடியோ லான்ச்சின் போது பொது வெளியில் தோன்றி தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்ற தகவல்கள் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதற்கு ஆரம்ப புள்ளியாக அவரின் துணைவியார் ஷாலினி அவர்கள் ரசிகர்களுடன் தாம் எடுத்துக் கொண்ட தனது குடும்ப புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். 

Also read:தறி கெட்டவர்களை தெறித்து ஓட செய்யும் அஜித்.. விடாமுயற்சியால் ஏற்பட போகும் மாற்றம்

அஜித் மற்றும் ஷாலினி தம்பதியருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். மீடியாக்களின் கோர பார்வை தன் குடும்பத்தின் மீது பட்டுவிடாமல் கண்ணும் கருத்துமாக பொத்தி பாதுகாத்து வருகிறார் அஜித். இருந்த போதும் அவ்வப்போது குடும்பத்துடன் இவர் எடுக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகுவது உண்டு. 

விடாமுயற்சியின் சூட்டிங் போது துபாயில் தனது மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை அங்கு உள்ள சொகுசு படகில் வெகு விமர்சையாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார் அஜித். அஜித்தின் மகனான ஆத்விக் தந்தையே மிஞ்சிய தனயனாக  சிறுவயதிலேயே கால்பந்து விளையாட்டுகளில் கோல்ட் மெடல் வென்று குட்டி மெஸ்ஸியாக ஜொலித்து வருகிறார். 

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே என்று மகனின் வெற்றியில் ஆனந்த பூரிப்படைந்து கொண்டிருக்கும் அஜித் சமீபத்தில் ஆத்விக்கின் 9 வது  பிறந்தநாளை குடும்பத்துடன் எளிமையான முறையில் தங்க நிற கால்பந்து வடிவில் கேக் செய்து அதை வெட்ட சொல்லி மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாராம். மேலும் கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஷாலினி. குட்டிதல ஆத்விக்கு ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

Also read: ரீ-ரிலீஸ் ஆகும் அஜித்தின் 3 மெகா ஹிட் படங்கள்.. பில்லாவை பின்னுக்குத் தள்ளிய கேங்ஸ்டர் படம்

Trending News