திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த தளபதி.. அடுத்து எந்த போட்டோவை போடலான்னு மண்டை காயும் அஜித்

Actor Vijay: தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அந்த பரபரப்பு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் சோசியல் மீடியாவை விஜய் தன் பக்கம் கட்டி போட்டுள்ளார்.

கேரளாவில் கோட் பட ஷூட்டிங்கிற்காக சென்ற அவர் ரசிகர்களை தற்போது சந்தித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே இது குறித்த போட்டோக்களும் வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கேரளாவிலும் கொண்டாடப்படும் விஜய்

vijay-actor
vijay-actor

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டை விட கேரளாவில் இவ்வளவு ரசிகர்களா என நம்ம ஊரு மக்களே ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். அது மட்டுமல்லாமல் டாப் ஹீரோக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

விஜய்யால் ஸ்தம்பித்து போன கேரளா

அதிலும் முக்கியமாக அஜித் எப்படி தன் பக்கம் கவனத்தை திருப்பலாம் என மண்டை காய்ந்து போயிருக்கிறாராம். கடந்த சில நாட்களாகவே இவர் பிரியாணி சமைப்பது, நண்பர்களுடன் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த தளபதி

kerala-vijay
kerala-vijay

இதற்கு முக்கிய காரணம் விஜய் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இருவருக்கும் மறைமுகமாக இருந்த போட்டி தற்போது அப்பட்டமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி

vijay-kerala
vijay-kerala

அந்த வகையில் தற்போது விஜய் தன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோ வைரலாகி வருகிறது. மேலும் கட்டுக்கடங்காத கூட்டம் அந்த ஊர் ஹீரோக்களையும் மலைக்க வைத்திருக்கிறது.

இதுதான் தளபதியின் கெத்து என ரசிகர்கள் தற்போது மார் தட்டி வருகின்றனர். மேலும் அடுத்து என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.

Trending News