ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்

Leo- Ajith: இதோ அதோ என்று பூச்சாண்டி காட்டி வந்த விடாமுயற்சி ஒரு வழியாக ஆரம்பமாக இருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவந்ததோடு சரி அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதனாலேயே ரசிகர்கள் படம் எப்போது தொடங்கும் என்று சலித்து போய் காத்திருந்தனர்.

அந்த வகையில் தற்போது அவர்களை குஷிப்படுத்தும் நோக்குடன் விடாமுயற்சி அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து திணறடிக்க இருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கான அனைத்து வேலைகளையும் தொடங்கி இருக்கும் தயாரிப்பு நிறுவனம் வரும் 15-ம் தேதி முக்கிய அப்டேட் ஒன்றையும் வெளியிட இருக்கிறது.

Also read: விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

அதன்படி இப்போது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு ஒரு வழியாக முடிந்திருக்கிறது. அதில் அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்திருப்பது பெரும் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த அர்ஜுன் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் உடன் கைகோர்த்துள்ளார்.

இதற்கு முன்பாக மங்காத்தாவில் இவர்கள் இருவரின் கூட்டணியும் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் அர்ஜுன் தாஸ், திரிஷா, தமன்னா ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். அதில் திரிஷா இதில் நடிப்பது பரவலாக பேசப்பட்டாலும் தற்போது அது உறுதியாகி இருக்கிறது.

Also read: கைவிட்ட விஜய் தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளியான அப்டேட்

அது மட்டுமின்றி காவாலா பாடல் மூலம் பலரையும் குத்தாட்டம் போட வைத்த தமன்னாவும் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். மேலும் அஜித்துக்கு முக்கிய வில்லனாக நடிக்க டாப் ஹீரோ ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இப்படி முழு வேகம் எடுத்துள்ள விடாமுயற்சி படக்குழு ஆகஸ்ட் 15 அன்று இந்த மொத்த அப்டேட்டையும் வெளியிடும் திட்டத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே ஆகஸ்ட் 15 அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் லியோ பட குழு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இதில் அவர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் வகையில் விடாமுயற்சியும் களம் இறங்கி இருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

Also read: மீண்டும் விஜய் மானத்தை வாங்கிய மக்கள் இயக்கம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட செயலாளர்

Trending News