1000 கோடி வசூல் செய்த இயக்குனரின் கூட்டணியில் 2 படங்கள்.. விஜய் குட்பை சொல்லும் நேரம் நடிப்பில் பிசியான அஜித்

Ajith: துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படங்களும் இதுவரை வெளியாகவில்லை. விடா முயற்சி பட அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் படம் வெளி வருவதற்கான அறிகுறி தான் தென்படவில்லை.

இதோ அதோ என இழுத்தடித்து வந்த விடாமுயற்சி இந்த வருட இறுதிக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையில் ரசிகர்களை ரொம்பவும் சோதிக்காமல் அடுத்த பட அறிவிப்பை அஜித் வெளியிட்டார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில் மற்றொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது அஜித் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குனருடன் இணைய இருக்கிறாராம். ஏற்கனவே இவர்களுடைய சந்திப்பு ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறது.

கே ஜி எஃப் இயக்குனருடன் இணையும் அஜித்

அதில் இருவரும் இரண்டு படங்களில் இணைவது குறித்து பேசி முடிவெடுத்து இருக்கின்றனர். அதில் ஒன்று தான் கே ஜி எஃப் 3. இதன் முதல் பாகம் 250 கோடியை வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் 1200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து மூன்றாம் பாகமும் உருவாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதில் யாஷுடன் இணைந்து நடிக்க அஜித் தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். மற்றொன்று அஜித் சோலோ ஹீரோவாக உருவாகும் படம்.

இந்த இரண்டு படங்களை பற்றிய பேச்சு வார்த்தை தற்போது நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் இது உருவாவதற்கு நிச்சயம் ஒரு வருடத்திற்கு மேல் காலதாமதம் ஆகும். அதன்படி 2025 இறுதிக்குள் கே ஜி எஃப்3 படப்பிடிப்பு ஆரம்பித்து விடும் என்கின்றனர்.

அந்த வகையில் விஜய் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறார். அந்த குஷியில் அஜித் எந்த பிரேக்கும் இல்லாமல் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். அதில் ஆயிரம் கோடி வசூல் இயக்குனருடன் அவர் கைகோர்க்க இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது.

ஆயிரம் கோடிக்கு அஸ்திவாரம் போடும் அஜித்