வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Ajith: விடாமுயற்சியை கண்டுக்காத அஜித்.. வேகமெடுக்கும் குட் பேட் அக்லி, எகிறும் பிசினஸ்

Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி கடந்த வருடம் அவருடைய பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருட பிறந்த நாளே வந்துவிட்டது விடாமுயற்சிக்கு மட்டும் விடிவு காலம் வரவில்லை.

சூட்டிங் நடப்பதும் ப்ரேக் விடுவதும் வாடிக்கையாக போய்விட்டது. அதனாலயே அஜித் அடுத்த படமான குட் பேட் அக்லி பட அறிவிப்பை வெளியிட்டார். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளிவர உள்ளது.

மேலும் இப்படத்தின் சூட்டிங் வரும் மே 10ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேகம் எடுக்கும் குட் பேட் அக்லி

இந்நிலையில் படம் பற்றிய மற்றொரு சர்ப்ரைஸ் தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்திற்கான ஓவர்சீஸ் பிசினஸ் தற்போது முடிந்து விட்டதாம்.

அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை 22 கோடிக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. இன்னும் படமே ஆரம்பமாகவில்லை ஆனால் வியாபாரம் இப்போது ஜோராக நடந்துள்ளது.

இதனால் தயாரிப்பாளரும் இப்போது சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அஜித் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கூட படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தலையிடவில்லையாம்.

அதனாலேயே படத்தை அவர் எதிர்பார்த்ததை விட நல்லபடியாக முடித்து விட தயாரிப்பு தரப்பு ஆர்வம் காட்டியுள்ளது. இது ஒரு புறம் இருக்க விடாமுயற்சி தொடங்குமா இல்லை டிராப் ஆகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Trending News