வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அஜித்துடன் இணையும் சிம்பு.. பேராசையில் சுற்றித் திரியும் ரஜினியின் அடுத்த பட டாப் இயக்குனர்

Top Tamil Director: இந்திய அளவில் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த அந்த இளம் டாப் இயக்குனர்தான் இப்போது இருக்கும் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறார். இவர் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் எடுத்த படம் எல்லாம் அடி தூள் தான்.

அதுவும் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் உடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் சம்பவம் செய்திருக்கும் லோகேஷ், அடுத்ததாக அஜித்துடன் எப்போது இணைவார் என தல ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் ட்ரீட் கொடுக்கும் விதமாக லோகேஷின் அடுத்த பட அப்டேட் அவர் வாயாலேயே வெளிவந்துள்ளது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் லியோ படத்தின் தொடர்ச்சியாக லோகேஷ் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார். அதன் தொடர்ச்சியாக அஜித்தின் படத்தை தான் லோகேஷ் கைப்பற்றி இருக்கிறார். அஜித் தற்போது மகிழ்திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படம் பண்ண போவதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அஜித்துடன் தனுஷ் அல்லது சிம்புவை இணைத்து லோகேஷ் படம் பண்ண திட்டமிட்டுள்ளார். ஆனால் இது எப்போது நடக்கும் என தெரியாது.

ரஜினியின் படம் முடிந்ததும் இந்த படத்தைப் பற்றிய தகவல் தெரியவரும். இதை சமீபத்திய பேட்டியில் லோகேஷ் சொன்னதால் இவர்கள் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். இது LUC-யா இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

அல்டிமேட் அஜித்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது லோகேஷின் நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. அஜித் மட்டுமல்ல அவருடன் தனுஷ் அல்லது சிம்பு இருவரையும் இணைத்து தரமான சம்பவத்தை செய்ய பார்க்கிறார். இந்த தகவல் இப்போது தல ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News