ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. தாமதமான விடாமுயற்சி, சைடு கேப்பில் கல்லா கட்டிய அஜித்

Actor Ajith: விடாமுயற்சி என்ற அறிவிப்பு வெளிவந்ததோடு சரி அதன் பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டும் வராமல் தயாரிப்பு தரப்பு அஜித் ரசிகர்களை ரொம்பவே சோதித்து வருகிறது. இதோ அதோ என்று பூச்சாண்டி காட்டி வந்த விடாமுயற்சி எப்போது ஆரம்பிக்கும் என்றே தெரியவில்லை.

இதுதான் சாக்கென்று அஜித்தும் தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக சென்றுவிட்டார். அந்த வகையில் அவர் இப்போது பைக்கிலேயே உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிருக்கிறார். இது குறித்த பல வீடியோக்கள், போட்டோக்கள் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

Also read: புலி வருது என பூச்சாண்டி காட்டும் விடாமுயற்சி.. மீண்டும் புதிய தேதி சொல்லி குழப்பும் படக்குழு

தற்போது அஜித் இதை வைத்து கல்லா கட்டிவிட திட்டமிட்டு இருக்கிறார். அதாவது அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பலரும் அதை அவர் ஓடிடி தளத்தில் வெளியிடுவார் என்று கூறி வந்தனர்.

ஆனால் அஜித் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். தற்போது அதை விசாரித்துப் பார்த்ததில் அஜித் யாருக்கும் தெரியாமல் பயங்கர பாதுகாப்போடு ஒரு நபரை வைத்து அந்த வீடியோக்களை எடிட் செய்து வருகிறாராம். விரைவில் அதை ஒரு டாக்குமென்ட்ரியாக தயார் செய்யும் முயற்சியிலும் அவர் இருக்கிறார்.

Also read: இப்போதைக்கு விடாமுயற்சி தொடங்க வாய்ப்பே இல்ல.. அஜித் செய்யும் வேலையால் புலம்பி தவிக்கும் இயக்குனர்

அந்த வகையில் இந்த டாக்குமென்டரி வீடியோவை அஜித் நெட் ஃபிளிக்ஸ் தளத்திற்கு கொடுக்க சம்மதித்து விட்டாராம். தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்த நிறுவனம் அஜித்தின் இந்த டாக்குமென்டரி படத்திற்காக ஒரு பெரும் தொகையை பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் விடாமுயற்சி தாமதமானாலும் அஜித்திற்கு லாபம் தான் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்து இருக்கிறார். அந்த வகையில் விடாமுயற்சி எப்போது ஆரம்பிக்குமோ தெரியவில்லை, அதற்குள் இந்த டாக்குமெண்டரி படத்தையாவது வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் கூறி வருகின்றனர்.

Also read: விடாமுயற்சியின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்.. ஜெட் வேகத்தில் லண்டன் விரைந்த பட குழு

Trending News