வேள்பாரிக்கு அஜித் போட்ட பிள்ளையார் சுழி.. காலியா போன திண்ணையில் பாய் போட்ட ஏ கே

Velpaari: விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைய படங்களை கமிட் செய்து வருகிறார் அஜித். வருடத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்தவர் இப்பொழுது 4 முதல் 6 மாதம் வரை தான் படம் பண்ண இயக்குனர்களுக்கு டைம் கொடுக்கிறார்.

அஜித், குட் பேட் அக்லி படத்துக்கு பின் இரண்டு இயக்குனர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறார். அந்த இரண்டு நபர்களுக்கும் போன் போட்டு அஜித்தே பேசியுள்ளார். அவர்கள் இருவரையும் அடுத்தடுத்து தனக்காக கதை ரெடி பண்ணுமாறு கூறியுள்ளார்

குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர்,ஆதிக்கிடம் படத்தை விரைவாக முடிக்கும்படி கட்டளை போட்டுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டுக்கு அருகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி படம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

காலியா போன திண்ணையில் பாய் போட்ட ஏ கே

சிரஞ்சீவி மற்றும் அஜித் இருவரும் முப்பது வருடங்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இவர்கள் சந்தித்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் வெளியானது. அஜித், ஆதிக் படத்திற்கு பின் சிறுத்தை சிவா அல்லது ஹச் வினோத் படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மெகா பட்ஜெட் இயக்குனருக்கு கால் பண்ணி பேசியிருக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு அஜித் தரப்பிலிருந்து போன் வந்திருக்கிறது. இருவரும் கூடிய விரைவில் ஒரு படம் பண்ணவிருக்கிறார்கள். ஏற்கனவே சங்கர் மெகா பட்ஜெட் வேள்பாரி படம் எடுப்பதாக இருக்கிறார். இப்பொழுது அஜித் தரப்பிலிருந்து பேசியதால் வேள்பாரி படத்துக்கு தான் இந்த பிள்ளையார் சுழி என்கின்றனர்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்