செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெளிவந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் அப்டேட்.. எனக்கு அந்த தேதியில் படம் முடியனும்னு அஜித் போட்ட கண்டிஷன்

Actor Ajith: தற்போது கோலிவுட்டில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் ஒருபக்கம் ட்ரெண்டிங்கில் இருந்தாலும், மறுபக்கம் விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் காத்து வருகின்றனர். இதற்கு நடுவில் அட்லீ இயக்கி ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படமும் பேசும்பொருளாக மாறியுள்ளது. இப்படி மாறி,மாறி ஒவ்வொரு படத்தின் அப்டேட்டும் விறுவிறுப்பாக இருக்கும் இந்த நேரத்தில், விடாமுயற்சி படம் இருக்குமிடம் தெரியாமல் உள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலை அஜித்தின் பிறந்தநாளான கடந்த மே மாதம் 1ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு அமலாக்கத்துறையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

Also Read: அஜித் மச்சானுக்கு செய்த பெரிய துரோகம்.. தவம் கிடக்கும் ரிச்சர்ட்டை ஏமாற்றி 3வது நபரை வளர்த்து விட்ட ஏகே

மேலும், இப்படத்தை எடுக்க போதுமான நிதி இல்லை என லைக்கா நிறுவனம் கூறியதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை தள்ளிப்போய் கொண்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித்தும் பைக் டூர் போய்க்கொண்டு ஊரை சுற்றி வருகிறார். மேலும் அண்மையில் இயக்குனர் மகிழ்திருமேனி, வரும் செப்டம்பர் மாதம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை கண்ட அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் சந்தோஷப்பட்டாலும், இந்த முறையாவது ஷூட்டிங் நடக்குமா என்ற சந்தேகத்துடன் உள்ளனர். இதனிடையே தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி படக்குழுவுக்கு ஒரு கண்டிஷனை போட்டு மொத்த இழுப்பறிக்கும் எண்டுகார்ட் போட்டுள்ளார். படத்தை ஆரம்பிப்பதாக கூறி 5 மாதங்கள் வரை ஆகியுள்ள நிலையில், அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை இப்படத்தில் நடிக்க அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

Also Read: இயக்குனராக என்ட்ரி கொடுக்கும் ஜேசன் சஞ்சய்க்கு போன் போட்ட அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா.?

அதுமட்டுமில்லாமல், ஜனவரியில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த கையோடு அடுத்த 11 மாதங்கள் வேர்ல்ட் டூர் போக அஜித் தயாராகி வருகிறாராம். இதன் காரணமாக அடுத்த 4 மாதங்களில் இப்படத்தை முடிக்க வேண்டுமென அஜித் கண்டிஷனுடன் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார். தற்போது லைக்கா நிறுவனம் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை தயாரிக்க ஆயத்தமாகி வரும் வேளையில், அஜித் போட்ட கண்டிஷனால் தற்போது ஆடிப்போயுள்ளனர்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜித் சொன்னதுபோல் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிந்தால் கட்டாயம் மே மாதம் ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளது. அதிலும் அஜித்தின் பிறந்தநாளின் போது இப்படம் ரிலீசானால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும். எது எப்படியோ, எப்படியாவது விடாமுயற்சி படத்தை இந்த முறையாவது விடாமல் எடுத்துவிடுங்கள் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: அஜித்துக்கு இருக்கும் ஒழுக்கம், விஜய்க்கு இல்லை.. பொறுப்பில்லாமல் நடித்த தளபதிக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்

Trending News