திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்துக்கு இருக்கும் ஒழுக்கம், விஜய்க்கு இல்லை.. பொறுப்பில்லாமல் நடித்த தளபதிக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் விஜய்,அஜித் இவர்கள் இருவருக்கு தான் தற்போது அதிக போட்டி நிலவி வருகிறது. அது பட ரீதியாக மட்டுமில்லாமல் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில போட்டிகள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது, அது அப்படியே பழக்கப்பட்டும் விட்டது. அந்த வகையில் விஜய்க்கும், அஜித்துக்கு உள்ள வித்தியாசங்கள் அதிகம் இருந்தாலும், சில விஷயங்களில் அஜித் தான் சரியானவராக தெரிவார்.

உதாரணத்திற்கு, அஜித் தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை அவருக்கு ஏற்றார் போலவும், ரசிகர்களுக்கு சரியானதாகவும் தேர்ந்தெடுப்பார். அதிலும், இவரது படங்களில் வில்லத்தனம் இருந்தாலும் மூத்த நடிகர்களுக்கு ஏற்ற அத்தனை மரியாதையையும் கொடுக்கும் வகையிலேயே தனது பட டயலாக்குகளை பேசுவார். மரியாதை குறைவான வசனம், நக்கலான வசனம் உள்ளிட்டவை அஜித் அறவே தவிர்த்துவிடுவார்.

Also Read: உனக்கு என்னடா உங்க அப்பா ஹீரோ, நீ இயக்குனர் கலெக்ஷன் அள்ளிடலாம்.. எஸ்ஏசி-க்கு மறுப்பு தெரிவித்த விஜய்யின் வாரிசு

இதன் காரணமாக, அஜித்தின் படங்களில் அவரது நகைச்சுவையை நம்மால் அதிகம் பார்க்க முடியாது. ஆனால் நடிகர் விஜய்யின் படங்களில் தன்னை விட வயது அதிகமான நடிகர்களை பெயர் சொல்லி அழைப்பது, அவர்களை நக்கல் செய்வது என நகைச்சுவைக்காக இவர் செய்யும் வேலைகள் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், இதெல்லாம் சரியானதல்ல என பிரபல இயக்குனர் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

90களில் பல திரைப்படங்களை இயக்கி வெற்றிக்கண்டவர் தான் இயக்குனர் ராஜகுமாரன், இவர் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின் படங்களை இயக்குவதில் அதிகம் நாட்டம் செலுத்தாமல் இருந்துவிட்டார். இந்த நிலையில், நடிகர் அஜித்துக்கு இருக்கும் ஒழுக்கம் விஜய்க்கு சுத்தமாக இல்லை என ஆவேசத்துடன் ஒரு பேட்டியில் பேசி தனது கன்டனத்தை தெரிவித்துள்ளார்.

Also Read: லைக்கா தயாரிப்பில் 2000 கோடிக்கு மேல் முதலீட்டில் வரிசையாக 11 படங்கள்.. விஜய் மகனையும் லாக் செய்த புத்திசாலித்தனம்

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குடும்பப் படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பெற்றது. இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் மட்டுமே வாரிசு படத்தில் ஒழுங்காக நடித்தவர் என்று இயக்குனர் ராஜகுமாரன் பேசினார்.

மேலும் பேசிய அவர், ஒரு மகன் தன் அப்பாவிடம் மரியாதை குறைவாக பார்ப்பது, பேசுவது, சிரிப்பது முறைப்பது உள்ளிட்ட செய்கைகளை விஜய் அப்படத்தில் செய்தது தவறு என்று ராஜகுமாரன் பொங்கி எழுந்தார். இவரை பார்த்து தான் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பின்பற்றி வரும் சமயத்தில் இப்படி விஜய் நடிப்பது கொஞ்சம் கூட ஏற்புடையதல்ல எனவும், அஜித் இதுபோன்ற கதாபாத்திரத்தில் ஒருநாளும் நடிக்கமாட்டார் எனவும் ராஜகுமாரன் பேசியுள்ளார்.

Also Read: அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி

Trending News