வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 கோடி கடன் இருந்த போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. வீடு தேடி வந்த 2 கோடி பணத்தை தூக்கி எறிந்த அஜித்

தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறியவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் என்னதான் இப்போது கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பார்க்கப்பட்டாலும் தொடக்கத்தில் வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்திருந்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெற்ற அஜித், 90களில் இருந்து இப்போது வரை முன்னணி நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் கடனில் இருந்த சமயத்திலும் அப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று வீடு தேடி வந்த இரண்டு கோடியை வேண்டவே வேண்டாம் என்று வைராக்கியமாய் தூக்கி எறிந்திருக்கிறார். 90களில் இடைப்பட்ட காலத்தில் அஜித்தை பிரபல குளிர்பான நிறுவனத்தின் மாடலாக நடிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

Also Read: சினிமாவை கைவிடும் தளபதி விஜய்.. துணிச்சலான முடிவால், அதிரும் திரையுலகம்

அதற்கு முன்பு மம்முட்டியை அதில் நடிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதேபோல அஜித்தும் நடிக்கவே முடியாது என கட்டன் ரைட்டாக சொல்லிவிட்டாராம். உள்ளூர் குளிர்பானத்திற்கு வேண்டுமானால் பணம் இல்லாமல் கூட பண்ணுவேன். வெளிநாட்டு குளிர்பானத்திற்கு சுத்தமாகவே பண்ண முடியாது என சொல்லிவிட்டார்.

அப்போது அஜித்துக்கு 5 கோடி கடன் இருந்திருக்கிறது. அந்த விளம்பரத்தில் மட்டும் நடித்திருந்தால் 2 கோடி கிடைத்திருக்கும். வீடு தேடி வந்த காசை பொருட்படுத்தாத அஜித், இந்தக் குளிர்பானத்தால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும். அதை எல்லாம் மனதில் வைத்து தான் அஜித் அதில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

Also Read: அந்தக் கொடுமையை ஒருவாட்டி பாத்துட்டோம்.. தளபதி 68 அரசியல் சம்பந்தப்பட்ட கதை இல்லையாம்

ஆனால் விஜய் வெளிநாட்டு குளிர்பான விளம்பரத்தில் நடித்து கொடுத்துவிட்டார். சொல்லப்போனால் விஜய்க்கு கடன் கிடையாது. அந்த சமயத்தில் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனராக பெரிய செல்வந்தராகவும் இருந்தார். விஜய் நடிகராக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த போது எஸ்ஏசி சுமார் 70 படங்களுக்கு மேல் இயக்கி பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் விஜய் அந்த 2 கோடியை வாங்கிவிட்டு நடித்துக் கொடுத்துவிட்டார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதை வைத்து, அஜித் அன்று முதல் இன்று வரை ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்து வருகிறார் என்று தல ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர். அதே சமயம் அஜித் நடிக்காமல் போனதினால் யாரும் அந்த குளிர்பானத்தை வாங்கி குடிக்காமல் இருக்கிறீர்களா அல்லது விஜய் நடித்ததால் மட்டும் தான் அந்த கூல்டிரிங்ஸை குடிக்கிறார்களா என்று தளபதி ரசிகர்கள் விஜய்யை விட்டுக் கொடுக்காமல் பேசுகின்றனர்.

Also Read: பார்ட்டியில் யாஷிகாவுடன் இறுக்கி அணைச்சு ஒரு முத்தா.. சர்ச்சையை கிளப்பிய அஜித் மச்சான் புகைப்படம்

Trending News