சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

முதல் கோணல் முற்றிலும் கோணல்.. படப்பிடிப்பு நடக்குமா? படம் ரிலீஸ் ஆகுமா?

விடாமுயற்சி என்று பெயர் வைத்த நேரம் இன்று வரை இழுபறியாக தான் உள்ளது. விடாமுயற்சியை மக்கள் மறந்தே போயிருந்த தருவாயில், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி, பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்தார்கள்.

அதற்கு காரணம் Netflix. ஒரு வகையில், Lyca நிறுவனத்தை Netflix காப்பாற்றியுள்ளது என்றே கூறலாம்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற அடைமொழி, விடாமுயற்சி படத்துக்கு நன்றாக பொருந்தும். காரணம், ஆரம்பத்தில் கிடப்பில் போட்டதால், இன்று வரை அனைவருக்குமே ஒரு தலைவலியாக மாறியுள்ளது.

படம் மட்டும் நன்றாக இல்லையென்றால் நெட்டிசன்கள் சிறப்பாக செய்துவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போற படம், இன்று வரை ஷூட்டிங்கே முடியாமல் இருக்கிறது. இன்னும் இரண்டு நாள் ஷூட்டிங் மிச்சம் உள்ளது. இதற்க்கு பின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் உள்ளது.

அனைத்தையும் பெண்களுக்குள் முடிக்கவேண்டும் என்றால், அவர்சரமாக, அதுவும் போர்க்கால அடிப்படையில் வேலை பார்த்தால் மட்டுமே முடியும்.

தள்ளி போகும் குட் பேட் அக்லீ

தற்போது அஜித் Confusion-ல் உள்ளார். காரணம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை முடிக்கவேண்டும். விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் குட் பேட் அக்லீ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மேலும் டப்பிங் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே நேரத்தில், நடிக்கவும் வேண்டும், டப்பிங் வேலையும் உள்ளதால், முதலில் எதை முடிப்பது என்று குழம்பி போயுள்ளார் அஜித்.

மேலும், முதலில் விடாமுயற்சி படம் வெளியாவதால், அந்த படத்தை முடித்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அஜித் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இதனால், குட் பேட் அக்லீ படத்தின் வேலைகள் கிடப்பில் கிடக்கிறது. டப்பிங் வேலைகள் தள்ளி போவதால் தயாரிப்பு நிறுவனமும் புலம்பி வருகிறது.

Trending News