வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பல்லோவில் அஜித்திற்கு ஆபரேஷனா.? அதிர்வலையை ஏற்படுத்திய அதிர்ச்சி ரிப்போர்ட்

Ajithkumar Medical Report: நடிகர் அஜித்குமார் பற்றி பெரும்பாலும் எந்த விஷயங்களும் அவர் தரப்பிலிருந்து வெளிவருவது என்பது ரொம்பவும் அசாத்தியமான விஷயம். அவருக்கென்று தனியாக எந்த சமூக வலைத்தள பக்கங்களும் இல்லாத சூழலில், ரசிகர்கள் யாராவது அவரை எங்காவது பார்த்து புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் தான் உண்டு. சமீபத்தில் அஜித்குமாரின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வந்திருப்பதால் தான் தல தரிசனம் அவருடைய ரசிகர்களுக்கு கிடைக்கிறது.

சமீபத்தில் நடிகை ஷாலினி மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். நீண்ட நாட்கள் கழித்து வெளியான நடிகர் அஜித்குமார் ஷாலினி தம்பதியின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகியது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள், ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து புறநோயாளியாக அந்த மருத்துவமனைக்கு சென்ற அஜித்குமார், விஐபி வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. முதலில் அஜித் தொடர்ந்து அஜர்பை ஜான் நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வந்திருக்கிறார் என்று தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டாலும், அதற்கு பின்னால் வரும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read:ஒரு நிலையில் இல்லாத விடா முயற்சி.. விடாத பணத்தாசையில் எல்லாத்தையும் இழக்கும் அஜித்குமார்

அதாவது நடிகர் அஜித்குமார் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு மார்ச் 6ஆம் தேதி சென்று இருக்கிறார். அப்போது அவருடைய மூளையில் சிறிய கட்டி இருப்பது சோதனையில் கண்டுபிடித்ததாகவும், அதை உடனே ஆபரேஷன் செய்து அகற்றி விடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அதற்கு அஜித் உடனே சம்மதம் தெரிவித்து, நேற்று மார்ச் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமாருக்கு நான்கு மணிநேர அறுவை சிகிச்சை நடைபெற்ற அந்த கட்டி அகற்றப்பட்டு விட்டதாகவும், அவர் தற்போது பூரண நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா ஊடகத்தின் வாயிலாகவும் இந்த செய்தி வெளியாகியிருந்தாலும், அஜித் தரப்பில் இருந்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நடிகர் அஜித்குமார் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் எப்போதுமே உறுதிப்படுத்துவார். தற்போது அஜித்துக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி வந்தாலும் இன்னும் சுரேஷ் சந்திரா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இது வதந்தியா அல்லது உண்மையிலேயே அஜித்குமார் இதுக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பது அவருடைய தரப்பில் இருந்து சொல்லப்படும் செய்தியை வைத்து தான் உறுதிப்படுத்தப்படும்.

Also Read:வாழுங்க, வாழ விடுங்கள்.. நீண்ட நாட்களுக்குப் பின்பு அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை

Trending News