தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.
மேலும் சமீபத்தில் வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாரி என தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அத்துடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தல அஜித் ரஷ்யா செல்வதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் விமானநிலையத்தில் அஜித் மாஸ்க் அணிந்தபடி சென்றுள்ளார், இது ரஷ்யாவில் எடுக்கப்பட்ட வீடியோ தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் இதை ரஷ்யாவில் எடுக்கப்பட்ட விடியோதான் என சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 90% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை விரைந்து முடித்து படத்தை வரும் அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.