சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

கடும் மன வருத்தத்தில் அஜித்.. விடாமுயற்சியையே இப்படி பொலம்ப விட்டானுங்களே

அஜித் படத்திற்கா இப்படி ஒரு நிலைமை. எந்த பிரச்சினைக்கும் போகாத ஒருவர் அஜித். அவர் படத்திற்கே இன்று பிரச்சனை வந்துள்ளது. என்ன பிரச்சனை என்று தயாரிப்பு நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இருந்தாலும் விடாமுயற்சி பட கதை உரிமை பிரச்சினை என முதலில் பேசப்பட்டது. பிறகு படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் படத்தில் சில குறைகள் உள்ளது என சொன்னதாக கூறினார்கள்.

இந்தப் படம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அஜித் இந்த படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என பேசப்பட்டது. இதனால் தயாரிப்பு நிறுவனம் வேண்டுமென்றே தள்ளி போட்டுள்ளதாம்.

Breakdown படத்தின் தயாரிப்பு நிறுவனம் 80 கோடி வரை கேட்டுள்ளதாம். லைகாவுக்கு இது பெரிய தொகை அல்ல இருந்தாலும் தள்ளி போட்டதில் அஜித் நொந்து போய்விட்டாராம்.

பொங்கலுக்கு வந்தால் இந்த படம் சரியாக போகாது என்கிறதா லைகா நிறுவனம் என்ற குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்.

Trending News