செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மதுரை மண்ணில் அஜித், எதற்கு தெரியுமா.? தடபுடலான ஏற்பாடுகளுடன் தயாராகி வரும் AK

Actor Ajith: அஜித், துணிவு படத்திற்கு பிறகு அவருடைய விடாமுயற்சி படத்தை பற்றி அரசல் புரசலாக மட்டுமே தகவல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் வரை இதற்கு எந்த ஒரு அஸ்திவாரத்தையும் போட்டதாக தெரியவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவருக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் வேர்ல்டு டூரை சிறப்பாக செய்து முடித்தார்.

இதற்கு இடையில் இவருடைய படம் இழுபறித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்குள் வேறு ஒரு விஷயத்தில் கவனத்தை திசை திருப்பி விட்டார். அதற்காக இந்த மாத இறுதியில் அஜித் மதுரைக்கு செல்ல இருக்கிறார். இந்த தகவல் வெளியான நிலையில் அஜித், ரசிகர்களை சந்திப்பதற்காக தான் போகிறார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அதற்காக இவர் போகவில்லையாம்.

Also read: முரளி குடும்பத்திலிருந்து உருவாகும் அடுத்த ஹீரோ.. அஜித் பட ஹிட் இயக்குனரால் பொறாமையில் அதர்வா

அதாவது இதே மாதிரி ஒரு விஷயத்துக்காக கடந்த வருடம் திருச்சி சென்றிருந்தார். அப்பொழுது போவதை பற்றி எந்த தகவலும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் போயிருந்தார். இதனால் அங்கே இவர் சென்றதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இவரை பார்க்க முட்டி மோதிக்கொண்டனர். இதை எப்படி சமாளிப்பது என்று போலீசார் மிகவும் தடுமாறி இருந்திருக்கிறார்கள்.

ஒருவேளை இந்த விஷயத்தை அஜித் முன்னதாகவே சொல்லி இருந்தால் அதற்கு தக்க ஏற்பாடுகளை போலீசார் செய்திருப்பார்கள் என்று பல பேச்சுகள் அடிபட்டது. அதற்காக இந்த வருடம் போவதை குறித்து சில தகவல்களை போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதாவது இந்த வருடம் மதுரையில் நடக்கும் துப்பாக்கிச் சூடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித் போவதாக கூறப்படுகிறது.

Also read: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரை விட்ட 2 ரசிகர்கள்.. அஜித் செய்யாததை, செய்த நடிகர் சூர்யா

இவருக்கு இந்த மாதிரியான விஷயங்களில் அதிக ஈடுபாடு உள்ளதால், கடந்த வருடம் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடும் போட்டியில் கலந்து கொண்டு வந்திருந்தார். அதேபோல் தற்போது மதுரையில் நடைபெறுவதால் அதை பார்ப்பதற்கு அஜித் போகப் போகிறார். எப்படி இருந்தாலும் இவர் வருகிறார் என்றால் ரசிகர்கள் அலை மோதி கொண்டு வருவார்கள்.

அப்படி இவரை பார்ப்பதற்கு கூட்டம் வந்தால் சமாளிப்பதற்காக போலீசார் தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் அஜித் அவருடைய பக்கத்திலிருந்து என்னென்ன விஷயங்களை சமாளிக்க முடியுமோ அதை எல்லாம் தக்க ஏற்பாடுடன் செய்து வருகிறார். ஆக மொத்தத்தில் அஜித் படத்தில் நடிப்பதை தவிர மற்ற எல்லா விஷயத்தையும் சரியாக செய்து வருகிறார் என்று சினிமா பிரபலங்கள் பலரும் இவரைப் பற்றி கூறி வருகிறார்கள்.

Also read: இமேஜை காரணம் காட்டி ஒதுக்கப்பட்ட அஜித்.. அவமானப்படுத்திய மீனா அம்மாவின் இன்னொரு முகம்

Trending News