புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

பண பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போனி கபூர்.. வலிமை படத்திற்கு வந்த OTT சிக்கல்

ஹிந்தியில் பெரிய தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த போனி கபூர் தமிழில் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

தற்போது அஜீத்தின் வலிமையை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரித்து வருகிறார். வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தவித்து வருகிறது வலிமை படக்குழு.

ஆகஸ்ட் மாதம் வலிமை படத்தின் ரிலீஸை முடிவு செய்திருந்த படக்குழு தற்போது தீபாவளிக்கு கொண்டு சென்று விடும் போல் தெரிகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த வெயிட் செய்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இது ஒருபுறமிருக்க ஒரே நேரத்தில் பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்ததால் மிகப்பெரிய பணச் சிக்கலில் மாட்டியுள்ளார் போனி கபூர். தெலுங்கில் சமீபத்தில்தான் பவன் கல்யாணை வைத்து வக்கீல் சார் என்ற படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தார்.

இந்த படத்தின் போதும் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு படத்தை குறித்த தேதியில் முடித்து வெளியிட்ட போனிகபூர் வலிமை படத்தை முடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் போட்ட பட்ஜெட்டை மீறி சென்று கொண்டிருக்கிறதாம்.

போனி கபூர் பணப் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்று அறிந்த ஒரு ஓடிடி நிறுவனம் வலிமை படத்தை தங்களுக்கு கொடுத்து விடுங்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார்களாம். ஆனால் அவரோ வலிமை படம் தியேட்டரில் தான் வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் கடன் கழுத்தை நெரித்தால் படம் கைமாறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற செய்திகள் வந்துள்ளன.

ajith-boney-kapoor-valimai
ajith-boney-kapoor-valimai

Trending News