அஜித்தின் வலிமையில் இந்த காட்சிக்கு தியேட்டரே அதிரும்.. தல ரசிகர்களை உசுப்பி விட்ட பிரபலம்

தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட உள்ள காட்சிகளுக்காக அனுமதி கிடைக்காமல் படக்குழுவினர் சற்று தடுமாறி வருகின்றனர்.

இதற்கிடையில் தல அஜித் ஏற்கனவே வலிமை படத்தின் டப்பிங் பணிகளை எடுத்தவரை முடித்துக் கொடுத்துவிட்டாராம். படமும் எடுத்தவரை எடிட்டிங் செய்து ரெடியாக உள்ளதாம்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வலிமை படத்தின் ஒவ்வொரு சீக்ரெட்டுகள் வெளியில் வரத் தொடங்கியுள்ளன. படத்தின் ரிலீஸ் பக்கமாக இருப்பதால் இந்த அப்டேட்டுகள் அனைத்துமே படத்தின் ரிலீஸுக்கு உதவியாக இருக்கும் என கருதுகின்றனர்.

தற்போது வலிமை படத்தில் பணியாற்றிய பிரபலங்களை யூடியூப் சேனல்கள் வளைத்து வளைத்து பேட்டி எடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் படத்தின் சண்டை பயிற்சியாளரான திலிப் சுப்புராயன் வலிமை படத்தின் முக்கியமான மாஸ் சேசிங் சண்டைக்காட்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தல அஜித் பைக் சேசிங், கார் சேஸிங் செய்து பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக பஸ் சேசிங் செய்துள்ளாராம். இந்த காட்சிகளை மாஸாக வந்திருப்பதாகவும், ஒவ்வொரு அடியும் இடியாக இருப்பது போல சண்டைக்காட்சியும் டபுள் மாஸாக இருக்கும் என கூறியுள்ளார் திலிப் சுப்புராயன்.

தல ரசிகர்களுக்கு இந்த அப்டேட் அல்வா கிடைத்தது போலாகியுள்ளது. ஏற்கனவே வலிமை படத்தின் சண்டைக்காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என செய்திகள் வெளியான நிலையில் சண்டை பயிற்சியாளரே இப்படி கூறியுள்ளது வலிமையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

valimai-ajith
valimai-ajith

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்