அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் என்னை அறிந்தால். கௌதம் மேனன் மற்றும் அஜித் கூட்டணியில் முதன்முதலாக வெளியான திரைப்படம்.
இந்த படம் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் தன்னுடைய சினிமாவின் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தார் அருண் விஜய்.
அதன்பிறகு அவருக்கு இப்போது வரை எல்லாமே ஏறுமுகம்தான். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றி பெற்று அவரை தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
அதிரடியாக உருவாகியிருந்த இந்த படம் அந்த வருட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கணிசமான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை அறிந்தால் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக அக்கட தேசத்தில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அஜித்தின் வேதாளம் படத்தையும் இவர்தான் ரீமேக் செய்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
சிரஞ்சீவி ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் தான் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று சிரஞ்சீவியின் செகண்ட் இன்னிங்ஸுக்கு பெரிய அடித்தளமாக அமைந்தது.