செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இமேஜை காரணம் காட்டி ஒதுக்கப்பட்ட அஜித்.. அவமானப்படுத்திய மீனா அம்மாவின் இன்னொரு முகம்

Actor Ajith: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில் பல அவமானங்களை கடந்து தான் அஜித் இன்று ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக நிலைத்து நிற்கிறார். அப்படிப்பட்ட இவரை நடிகை மீனாவின் அம்மா இமேஜை காரணம் காட்டி ஒதுக்கிய ஒரு சம்பவம் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

அதாவது அஜித் வளர்ந்து வந்த காலகட்டத்தில் மீனா முன்னணி நடிகையாக ரொம்பவும் பிசியாக இருந்தார். அப்போது அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அஜித்துக்கு விருது வழங்க அவரை மேடைக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது இருவரையும் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடும் படியும் கேட்டு இருக்கிறார்கள்.

Also read: மீனாவின் அழகில் மயங்கி கிடந்த 4 நடிகர்கள்.. காதல் எனக் கூறி திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட சம்பவம்

உடனே மீனாவும் இதில் என்ன இருக்கிறது ஓகே என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதை பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் அம்மா உடனே ஆவேசமாகி மீனாவை ஆடக்கூடாது என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அஜித் ஒரு சாதாரண நடிகர், அவருடன் நடித்தால் உன் இமேஜ் போய்விடும் என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அஜித் இட்ஸ் ஓகே என்று பெருந்தன்மையாக கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கி இருக்கிறார்.

ஆனால் அதே மீனா பல வருடங்களுக்குப் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த சமயத்தில் அஜித் தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அப்போது அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று பல நடிகைகள் ஏங்கினார்கள். அப்படிப்பட்ட காலத்தில் மீனா அஜித்துடன் இணைந்து வில்லன், சிட்டிசன், ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களில் நடித்தார்.

Also read: வயது வித்தியாசம் பார்க்காமல் மீனா ஜோடி போட்ட 6 பிரபலங்கள்.. 28 வயசு கேப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்

இதைத்தான் கர்மா என்று சொல்கிறோம். மேலும் அஜித்தை அவமானப்படுத்தி இமேஜ் தான் முக்கியம் என்று பெருமைப்பட்ட மீனாவின் அம்மாவுடைய மற்றொரு முகம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இவரும் தமிழ், மலையாளம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த அத்தனை படங்களையும் நம்மால் கண் கொண்டு பார்க்க முடியாது.

அந்த அளவுக்கு மோசமான கவர்ச்சியில் பலரும் கண் கூசும் அளவுக்கு உடை அணிந்து இவர் நடித்திருக்கிறார். இவருடைய தங்கை அதற்கு மேலாக சென்சார் போர்டு அதிகாரிகளே கண்டிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு அஜித்தை அவமானப்படுத்த என்ன தகுதி இருக்கிறது என இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: காதலுக்காக உயிரை விட்டு நடித்த 6 படங்கள்.. மீனா இறந்ததும் கூடவே உயிரை விட்ட நடிகர்

Trending News