வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

90% வெற்றி மற்றும் வெள்ளி விழா கொடுத்த இயக்குனர்.. 4 படங்களில் கேள்விக்குறியான அஜித் இயக்குனர்

Actor Ajith : தான் இயக்கிய படங்களில் 90% படங்கள் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்ட இயக்குனர் இவர். ஒரே மாதிரி கதை அம்சமும் தொடர்ந்து நடித்த அதே ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்தான் இவர். கிட்டத்தட்ட 3 ஹீரோக்களை வளர்த்து விட்டவர் என்று கூட சொல்லலாம். ஆம் ரஜினி, கமல், சிவாஜி ஆகிய மூன்று பேரையும் வைத்து அதிகபட்சமாக வெற்றி படங்களை கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன். ஆனால் இப்போது சில இயக்குனர்கள் 3, 4 படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். அந்த வரிசையில் 4 படங்கள் மட்டுமே இயக்கி இயக்குனரான சிறுத்தை சிவா, இயக்குனர் எஸ். பி. முத்துராமனை போல மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கிய போதும் படங்களில் பெரிய சுவாரசியமானது இல்லை என்றே சொல்லலாம்.

தவிர்க்க முடியாத இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ். பி. முத்துராமன். 1972-ல் கனிமுத்து பாப்பா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எஸ். பி. முத்துராமன். மயங்குகிறாள் ஒரு மாது, துணிவே துணை போன்று 79 படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். சிவாஜி நடிப்பில் ரிஷிமூலம், கவரிமான், வெற்றிக்கு ஒருவன் போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

Also Read  : 25 படங்கள், ரஜினியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் இந்த ஒரே இயக்குனர்.. அதிலும் 15-க்கு மேல சூப்பர் டூப்பர் ஹிட்

இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சமூகப் பின்னணி கொண்ட யதார்த்தமான கதை அம்சங்களாக பயணித்து வந்ததோடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை அம்சங்களில் திரைக்கதையில் வலு சேர்த்து இயக்கியிருப்பார். மேலும் வர்த்தக ரீதியாக படங்களை தந்து அதனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையில் அவரை மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க வைத்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. புவனா ஒரு கேள்விக்குறி முதல் பாண்டியன் வரை ரஜினிகாந்தின் 25 படங்களை இயக்கிய பெருமை மிக இயக்குனர் எஸ். பி. முத்துராமன். கமலை வைத்து இயக்கிய 10 திரைபடங்களில் சகலகால வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களும் அடங்கும். திரை உலகம் கண்டெடுத்த ஒரு தரமான இயக்குனர் என்றால் அது மிகையல்ல.

Also Read : அஜித் கழட்டிவிட்ட இயக்குனருக்கு தோள் கொடுக்கும் கமல்.. இவரை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா.?

இப்படி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை அம்சங்கள் கொண்டு முன்னணி ஹீரோக்களையே வைத்து எதார்த்தமான மசாலா படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் எஸ். பி. முத்துராமன். ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியது சிறுத்தை, விசுவாசம், வீரம், அண்ணாத்த ஆகிய 4 படங்கள் தான். அத்துடன் மசாலா தீர்ந்து விட்டது போல், மாஸ் ஹீரோக்கள் வைத்து படங்கள் இயக்கிய போதும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அவருடைய படங்கள் என்பது தான் உண்மை.

Also Read : கடைசியில் அஜித்துக்கு வந்த சீரியஸ்னஸ்.. சிறுத்தை சிவா கூட்டணிக்கு பின் 3 பெரிய திமிங்கலத்துக்கு பொறி வைக்கும் AK

Trending News