திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் ரஜினிக்கு மட்டும் அள்ளிக் கொடுப்பீங்க.. இந்த விஷயத்தில் பொறாமையில் வரிஞ்சு கட்டி வரும் அஜித்

Rajini, Vijay and Ajith: ஒரு காலத்தில் ரஜினி மற்றும் கமல் இருவர்களுக்கு இடையே போட்டி நிலவிக் கொண்டு நீயா நானா என்கிற மோதல் நிலவியது. ஆனால் தற்போது ரஜினி விஜய் போட்டி போட்டு மோதிக்கொள்ளும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. அந்த வகையில் 73 வயதானாலும் என்னுடைய நடிப்புக்கு யாரும் ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினி இறங்கி அடிக்கிறார்.

இதனை தொடர்ந்து சமீப காலமாக தமிழ் சினிமாவில் எந்த நடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பு போய்க் கொண்டிருக்கிறது. அதன்படி விஜய் மற்றும் ரஜினி இவர்கள்தான் அதிக சம்பளத்தை டிமாண்ட் பண்ணி வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். முக்கியமாக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி விஜய் என்ன சம்பளம் வாங்குகிறார் என்றுதான்.

அதைத் தெரிந்து கொண்டு தான் அதிலிருந்து இவருடைய சம்பளத்தை அதிகமாக பிக்ஸ் பண்ணி தயாரிப்பாளர்களிடம் கேட்கிறார். அதனால் தற்போது ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் 220 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இனி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க போகும் படத்திற்கும் இதிலிருந்து 30 கோடியை அதிகம் ஆக்கி மொத்தமாக 250 கோடி வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி இருக்கிறார்.

Also read: நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிக்கும் ரஜினி.. வாய் வார்த்தையுடன் நிறுத்திக் கொண்ட விஷால்

அதுபோலவே உங்களை விட நான் எதற்கும் கம்மி இல்லை என்று விஜய்யும் சம்பளத்தை உயர்த்தி விட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வரும் படத்திற்கு 200 கோடி சம்பளத்தை ஃபிக்ஸ் பண்ணி இருக்கிறார். இப்படி விஜய் ரஜினிக்கு மட்டும் சம்பளத்தை அள்ளிக் கொடுக்கிறீர்களே என்று இந்த விஷயத்திற்காக அஜித்தும் பொறாமையில் வரிஞ்சு கட்டி வந்து விட்டார்.

அதே நேரத்தில் ஒரேடியாக சம்பளத்தை கூட்டி விட முடியாது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்து விட்டார். அதாவது தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துவரும் விடாமுயற்சி படத்திற்கு 165 கோடி வாங்குகிறார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திற்கு 180 கோடி சம்பளத்தை ஏற்றிருக்கிறார். எதையுமே கண்டுகொள்ளாத அஜித் இந்த விஷயத்தை மட்டும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

Also read: LCU கேள்விப்பட்டிருக்கோம் அது என்ன NCU? ரஜினிகாந்த் ஓகே சொல்லி பற்ற வைத்த நெருப்பு

Trending News