சத்தமே இல்லாமல் வேறு படத்தை எடுக்கும் அஜித்.. விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்

Actor Ajith: விடாமுயற்சி படத்தை தொட்டதிலிருந்து அஜித்துக்கு ஏழரை சனி பிடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக வெளியான நிலையில் விஜய் அடுத்ததாக லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். ஆனால் விடாமுயற்சி படம் இன்னும் தொடங்கிய பாடு இல்லை.

மேலும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு முடிந்த இத்தனை மாதங்கள் ஆன நிலையில் அஜித் இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன தான் செய்தார் என்பதும் தெரியவில்லை. அவ்வப்போது அவருடைய புகைப்படம் மட்டும் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருந்தது.

Also Read : பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரை விட்ட 2 ரசிகர்கள்.. அஜித் செய்யாததை, செய்த நடிகர் சூர்யா

இந்த சூழலில் அஜித் சத்தமே இல்லாமல் வேறுபடத்தை எடுத்து வருகிறாராம். அதாவது விடாமுயற்சி காலதாமதம் ஆகி வருவதால் அதற்குள் மற்றொரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது அஜித் பைக்கில் உலக சுற்றுலா சொல்வதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளாராம்.

இதை தனது அலுவலகத்தில் கொடுத்து எடிட்டிங் செய்து வருகிறாராம். இதில் நூலிலே கூட வெளியில் கசிந்து விடக்கூடாது என மிகவும் கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறாராம். இதற்கான காரணம் இரண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் ஓடிடி தளத்திற்கு இந்த வீடியோவை விற்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

Also Read : இமேஜை காரணம் காட்டி ஒதுக்கப்பட்ட அஜித்.. அவமானப்படுத்திய மீனா அம்மாவின் இன்னொரு முகம்

இது இல்லை என்றால் தனது கம்பெனியின் விளம்பரத்திற்காக பயன்படுத்தப் போகிறாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். ஆனால் அஜித்தின் இந்த பைக் சுற்று பயண வீடியோ படு பயங்கரமாக தயாராகி வருவதாக அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆகையால் விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸ் போது கூட இந்த வீடியோ வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இவ்வளவு கமுக்கமாக ஒரு விஷயத்தை அஜித் செய்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும். ஆகையால் இதை தொடர்ந்து இனி தான் விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறக்க உள்ளது.

Also Read : ஆள் அட்ரஸே தெரியாமல் போன விஜய், அஜித் பட ஹீரோயின்.. சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லக்கி சாம்