வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தறி கெட்டவர்களை தெறித்து ஓட செய்யும் அஜித்.. விடாமுயற்சியால் ஏற்பட போகும் மாற்றம்

Ajith is expected to participate in the Vidaa Muyarchi Audio Launch: தமிழ் சினிமாவின் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் சினிமாவை பதம் பார்த்த கையோடு அரசியலிலும் நுழைந்து ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வகையிலும் திட்டம் தீட்டி வருகின்றனர். இதில் அஜித் மட்டுமே தன் பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி எந்த வம்புக்கும் தும்புக்கும் போகாமல் இருந்து வருகிறார். 

கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அடுத்ததாக மகிழ்ந்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சியில் பிசியானார் தல. பட விஷயங்களில் ஒரு சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் வெளியே விடாமல் சஸ்பென்சை மெயின்டெயின் பண்ணி வருகின்றனர் விடாமுயற்சி பட குழுவினர், இது தலைவரின் அன்பு கட்டளையாம். 

படம் பற்றிய எதிர்பார்ப்புகள் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அஜித். தனக்கு இருக்கும் திறமையை பயன்படுத்தி ரசிகர்களை ஒன்று திரட்டி கோட்டையை பிடிக்க கனவு கண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் ரசிகர் மன்றமே வேண்டாம் என  கலைத்தவர் அஜித். 

Also read: ரஜினியின் வெற்றி ரகசியத்தை பின்பற்றும் அஜித்.. பூரித்துப்போய் தயாரிப்பாளர் கூறிய உண்மை சம்பவம்

ஆனால் அஜித்தை பிடிக்காத சில விஷமிகள் வாங்க அஜித்தை புறக்கணிப்போம் என்று சொற்பொழிவு ஆற்றி மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குகிறோம் என்ற பெயரில் அஜித்திற்கு எதிராக அவரது ரசிகர்களை திருப்பி வருகின்றனர். 

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உங்களுக்கு வேற எந்த செய்திகளும் இல்லையா என சினிமா ஆர்வலர்கள் பலரும் அஜித்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளனர். இது எதைப் பற்றியும் வாய் திறவாது இருந்த அஜித் “முகநக நட்பது நட்பன்று! எனை வெல்பவன் எவன் இன்று” என முதன்முறையாக தன் மவுனத்தை கலைந்து தனக்கு இருக்கும்  அவப்பெயரை சீர் செய்ய வெளியே வர உள்ளார். 

எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு ஒரு பிளான் வச்சிருக்கிறாராம் அஜித். விஜய் எப்போது அரசியல் பேச வெளியே வருகிறாறோ, அப்போது அஜித்தும் வெளியே வந்து அரசியல் பேசாமல் சினிமாஅரசியல் பண்ணப் போகிறார். இது விடாமுயற்சி ஆடியோ லாஞ்சில் தொடங்கப் போகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. எப்படியோ சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டாங்க.. இனி தலையின் ஆட்டம் ஆரம்பம்..!

Also read: மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகும் 6 படங்கள்.. விஜய்க்கும் அஜித்துக்கும் இதுல கூட போட்டியா.?

Trending News